தொலைக்காட்சி!!

Search This Blog

Thursday, November 2, 2017

நாக்கில் வெள்ளைப் படலம் இருப்பது ஆபத்தா? இவர்களுக்கு மட்டும் அடிக்கடி வருமாம்!!


உணவின் சுவையை உணர்த்தும் நாக்கின் நிறம் மற்றும் தோற்றத்தை வைத்து ஒருவருடைய உடலின் ஆரோக்கியம் எப்படியுள்ளது என்பதை தெரிந்துக் கொள்ள முடியும்.
நாக்கில் வெள்ளை படலம் இருப்பதன் அர்த்தம்?
நாக்கின் மேல் வெள்ளை அல்லது மஞ்சள் கலந்த வெள்ளைப் படலம் இருந்தால், அதற்கு ஈஸ்ட் தொற்றுகள் உள்ளதாக அர்த்தம்.
அளவுக்கு அதிகமான கேண்டிடா உற்பத்தி, அதிகப்படியான ஆண்டி-பயோட்டிக் எடுத்துக் கொள்வதாலும், உடலில் நீர் வறட்சி ஏற்படுவதாலும் நாக்கில் வெள்ளைப்படலம் உண்டாகிறது.
யாருக்கெல்லாம் அடிக்கடி வரும்?
நாக்கில் ஏற்படும் வெள்ளை படலம் இயற்கையான பூஞ்சை வளர்சியாகும். இது வாயில் அடிக்கடி புண் ஏற்படுபவர்கள், நோயெதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்கள் ஆகியோருக்கு அடிக்கடி வரும்.
அதோடு புற்றுநோயாளிகள், எச்.ஐ.வி மற்றும் ரத்தசோகை மற்றும் சர்க்கரை நோயாளிகள், புகைப்பிடிப்பவர்கள் மற்றும் வாய் வறட்சியால் பாதிக்கப்பட்டவர்கள் ஆகியோருக்கு வாய் புண் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது.
நாக்கில் வெள்ளைப் படலம் வராமல் தடுப்பது எப்படி?
  • நாக்கில் ஒரு ஸ்பூன் அளவு உப்பை தூவி டூத் பிரஷ் கொண்டு தினமும் லேசாக தேய்க்க வேண்டும். அல்லது சூடான நீரில் ஒரு ஸ்பூன் உப்பு கலந்து வாயை கொப்பளிக்க வேண்டும்.
  • ப்ரோபயோட்டிக் கேப்சூல் வடிவில் மருந்து கடைகளில் கிடைக்கும். அதனை பிரித்து சிறிதளவு நீரில் கலந்து அதை நேரடியாக நாக்கில் தடவலாம் அல்லது அந்த நீரை கொண்டு வாயை கொப்பளிக்க வேண்டும்.
  • காலையில் பல் துலக்குவதற்கு முன் தேங்காய் எண்ணெய்யை 1 ஸ்பூன் அளவு எடுத்து அதை கொண்டு 10 நிமிடம் வாயை கொப்பளித்த பின் சூடான நீரில் ஒருமுறை வாயை கொப்பளிக்க வேண்டும்.
  • ஒரு ஸ்பூன் கற்றாழை ஜெல்லுடன் சிறிதளவு தண்ணீரைக் கலந்து வாயில் போட்டு வாயில் அனைத்து இடங்களிலும் பரவுமாறு நன்றாக கொப்பளித்து துப்ப வேண்டும்.
  • இரவு உறங்க செல்லும் முன் 1 ஸ்பூன் தயிரை எடுத்து நாக்கில் தடவி அதனை இரவு முழுவதும் வைத்திருந்து அதன் பின் மறுநாள் காலை எழுந்ததும் வாயை கொப்பளிக்க வேண்டும்.
  • ஒரு டம்ளர் தண்ணீரில் 1/2 டீஸ்பூன் மஞ்சளை கலந்து வாயை நன்றாக கொப்பளித்து துப்ப வேண்டும்.
  • ஒரு ஸ்பூன் எலுமிச்சை பழத்தின் சாற்றினை எடுத்து அதை 2 டேபிள் ஸ்பூன் தண்ணீரில் கலந்து வாயை நன்கு கொப்பளிக்கலாம். அல்லது எலுமிச்சையை நேரடியாக நாக்கில் வைத்து தேய்த்து வாயை கொப்பளிக்கலாம்.
  • 1/2 டீஸ்பூன் பேக்கிங் சோடா, 2 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு ஆகிய இரண்டையும் 1 டம்ளர் தண்ணீரில் கலந்து வாயை நன்கு கொப்பளிக்க வேண்டும்.
  • ஒரு கப் தண்ணீரில் 4-5 வேப்பிலையை போட்டு கொதிக்க வைத்து சூடு ஆறியதும் அதை கொண்டு வாயை நன்கு கொப்பளிக்க வேண்டும்.
  • 4-5 பூண்டுகளை நன்கு நசுக்கி 1 ஸ்பூன் சாறு எடுத்து அதை தண்ணீர் கலந்து நாக்கில் தடவலாம். அல்லது பூண்டுச் சாற்றை அப்படியே நாக்கில் தடவி 5 நிமிடம் கழித்து வாயை கொப்பளிக்க வேண்டும்.
http://news.lankasri.com/disease/03/135917

No comments:

Post a Comment