தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 30 அக்டோபர், 2017

ஜிமெயில் சேவையில் Recall வசதி அறிமுகம்: பயன்படுத்துவது எப்படி?


வார்த்தைகள் மிகவும் பலம் வாய்ந்தவையாகும். வாய் தவறி அவற்றினை கொட்டிவிட்டால் மீண்டும் பெற்றுக்கொள்ள முடியாது என கூறுவார்கள்.
இப்படியாக இருக்கையில் மின்னஞ்சல் சேவைகளிலும் தவறுதலாக அனுப்பப்படும் மின்னஞ்சல்களினால் சில பிரச்சினைகளை எதிர்நோக்க நேரிடும்.
எனினும் நிஜ வாழ்வு போலன்றி மின்னஞ்சல்களில் அனுப்பிய செய்திகளை மீளவும் பெற்றுக்கொள்ளலாம்.
இவ் வசதியினை கூகுளின் ஜிமெயிலில் பெற்றுக்கொள்ள முடியும்.எனினும் இச் சேவையில் ஒரு வரையறை உண்டு.
அதாவது உச்ச பட்சமாக மின்னஞ்சலினை அனுப்பி 30 செக்கன்களுக்குள் மீளப் பெற்றுக்கொள்ள வேண்டும்.
தவறின் குறித்த மின்னஞ்சல் பெறுநரை சென்றடைந்துவிடும்.
இந்த நேர இடைவெளியினை 10 மற்றும் 20 செக்கன்கள் எனவும் வரையறை செய்துகொள்ளவும் முடியும்.
இச் சேவையினை செயற்படுத்துவதற்கான வழிமுறைகளை வீடியோவின் ஊடாக தெரிந்துகொள்ளலாம்.

http://news.lankasri.com/internet/03/135630

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக