தொலைக்காட்சி!!

Search This Blog

Sunday, October 8, 2017

ஈறு, நகம், கூந்தல் ஆகியவற்றின் ஆரோக்கியத்திற்கும் ஒரு பொருளுக்கும் தொடர்புள்ளது!! அது எது தெரியுமா?


உங்களுக்கு தெரியுமா நமது ஈறுகள், நகங்கள், தோல் மற்றும் முடி இவை அனைத்தும் ஒரே அமைப்பைக் கொண்டுள்ளது என்று? இந்த நான்கும் ஒன்றாக பாதிக்கப்படுவதை கவனித்திருக்கிறீர்களா?

ஈறுகளின் ஆரோக்கியம் நன்றாக இருக்கின்றது எனில் குடலின் ஆரோக்கியமும் நன்றாக இருக்கும் என்ற தொடர்பை அறிவீர்களா? மேலே குறிப்பிட்டுள்ள அனைத்து கேள்விகளுக்கும் பதில் இந்த கட்டுரையில் உள்ளது.

நகம், கூந்தல், ஈறுகள் போன்ற அமைப்பிற்கு கெரட்டின் ஒரு பொதுவான காரணியாக உள்ளது. கெரட்டின் என்பது ஒரு புரதம் ஆகும். எனவே தான் நீங்கள் எடுக்கும் உணவில் புரதக் குறைப்பாடு இருக்குமானால் இவை அனைத்தும் பாதிக்கப்படும்.

ஈறுகளில் ரத்தக்கசிவு, வலி, முடி நொறுங்குதல், முகப்பரு மற்றும் நகங்களில் வித்யாசம் இவை அனைத்தையும் குறிப்பிட்டு கவனியுங்கள்.

நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், அஜீரண கோளாறுகள் போன்ற செரிமானத்தை பாதிக்கும் கோளாறுகள் இருந்தாலும் மேற்கூறிய பிரச்சனைகள் அனைத்தும் ஏற்படும்.

செரிமான மண்டலத்தின் ஏதேனும் ஒரு பகுதியில் சுகாதார பற்றாக்குறை ஏற்பட்டிருந்தால் குடல் பகுதி பாதிக்கப்படும். குடல் பகுதியை தொடர்ந்து ஈறுகளில் பிரச்சனைகள் ஏற்படும். சில சமயங்களில் இவை வாயில் துர்நாற்றம் மற்றும் சீரற்ற சுவாசத்தையும் ஏற்படுத்தும்.

ஆரோக்கியமற்ற உணவு பழக்கத்தால் குடல் ப்ரோபயாடிக் பாக்டீரியாவால் பாதிக்கப்படுகின்றது. இது ஈறுகளையும் தோல்களையும் பாதிக்கும்.

வைட்டமின் சி மற்றுமொரு காரணியாகும். ஆரோக்கியமான உணவு பழக்கத்தில் போதுமான அளவு விட்டமின் சி இருப்பதால் ஈறுகள், தோல், நகம் மற்றும் முடி இவற்றில் ஆரோக்கியமான வித்தியாசத்தை காண முடியும். இது ஒரு ஆன்டி-ஆக்ஸிடென்ட் ஆகும். இதுவே இவை அனைத்தின் ஆரோக்கியத்தை அதிக படுத்தவும், சீராக வைக்கவும் உதவுகிறது.

வைட்டமின் ஈ இதுவும் ஒரு ஆன்டி-ஆக்ஸிடென்ட் ஆகும். பாதாம், சிட்ரஸ் நிறைந்த பழங்கள், வால்நட்ஸ், ஆளி விதைகள் மற்றும் பச்சை இலை காய்கறிகள் இவை அனைத்திலும் நிறைய ஊட்டச்சத்துக்கள் நிறைந்து உள்ளன. பல்வேறு காரணங்களால் ஆரோக்கியமான உணவு பழக்கம் கூடுதலான வேலையை செய்கிறது நமது உடலில்.

தொழில் நுட்ப துறை, பயணம் தொடர்பான வேலை மற்றும் பல்வேறு துறைகளில் வேலை பார்ப்பவர்கள் என நம்மில் பலர் வீட்டில் செய்யும் உணவுகளை சாப்பிட முடியாமல் வெளியே உணவு உண்பார்கள்.

அந்த உணவுகள் அனைத்தும் ஆரோக்கியமற்றது. எனினும் வீட்டில் உணவு சாப்பிடுபவர்களும் வேலையில் ஏற்படும் மன அழுத்தத்தால் இவர்களும் பாதிக்கப்படுகின்றனர்.

அத்தகைய மக்கள் இயற்க்கை முறை சார்ந்த உணவுகளை GMP(நல்ல தரமான இயற்கை உற்பத்தி) மற்றும் தரங்கள் அடிப்படையில் எடுக்க வேண்டும். ஆனால் அதற்கு முன்பு நியூட்ரிஷியனை ஆலோசனை பெற வேண்டும்.

http://www.manithan.com/health/04/144229

No comments:

Post a Comment