தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 3 அக்டோபர், 2017

புனித தலம் சுற்றுலா தலமானது எப்படி? இலங்கை மன்னனுக்கு நடந்த விபரீதம்...!


காலத்தால் மிகவும் தொன்மையான உலகின் முக்கிய சமயங்களில் ஒன்றாக கருதப்படுகிறது இந்து சமயம். ஏறக்குறைய 850 மில்லியன் இந்துக்களைக் கொண்டு உலகின் மூன்றாவது பெரிய சமயமாக இருக்கின்றது.

இந்து சமயத்தில் பல்வேறு பொக்கிஷங்கள் பொதிந்து கிடக்கின்றன. உடை, உணவு, கலாசாரம் என அனைத்திலும் இந்து சமயம் பல்வேறு கருத்துக்களையும் சிந்தனைகளையும் போதிக்கின்றது.

அன்று எம்மை அடிமைப்படுத்திய அந்நிய நாட்டவரும் இன்று பொறாமைப்படும் அளவுக்கு கலாசார பண்பாடுகளை கொண்டதொரு சமயமாக இந்து சமயம் சிறப்பு பெற்று விளங்குகின்றது.</p><p>இன்று மிகப் பெரிய சிவன் சிலை தொடர்பிலான ஒரு உண்மையை தெரிந்து கொள்ள போகின்றோம். மிர்தேஷ்வர் என்ற ஒரு இடம் பலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை.

குறித்த இடத்தில் ரயில் பாதை உருவான பின்னர், சிறிது சிறிதாக வெளிச்சத்துக்கு வந்த இடங்களில் ஒன்றுதான் மிர்தேஷ்வர். கரவல்லி என்றும் கானரா என்றும் இப்பிரதேசம் அழைக்கப்படுகிறது.

மங்களூரிலிருந்து கார்வார் வரை நீளும் கர்நாடக கடற்கரையோரத்தில் ஒரு சிறிய குன்றின் மேல் கோயில் உள்ளது. கோயிலின் அருகிலேயே ஒரு மேட்டுப்பாங்கான பகுதியில் சிவனாரின் சிலை 123 அடியில் கம்பீரமாக வீற்றுள்ளது.

உலகத்திலேயே இரண்டாவது மிகப் பெரிய சிவன் சிலை இதுதான். கடற்கரையை நோக்கிய வண்ணம் பத்மாசனத்தில் அமர்ந்திருக்கிறார். அந்த ஊரில் எந்தப் பக்கத்தில் இருந்து பார்த்தாலும் சிலையை பார்க்க முடியும்.

எதிரே நந்தியின் சிலையும் இருக்கிறது. கோயில் சற்றே தாழ்ந்த இடத்தில் உள்ளது. கோயிலுக்கு முன்னால் மிகப் பெரிய இராஜகோபுரம் உள்ளது. கன்துகா என்ற குன்றின் மேல் கோயில் அமைந்துள்ளது.

இந்த இடத்துக்கு செப்பனிடப்பட்ட வீதி உள்ளது. கோபுரம் மற்றும் சில இடங்களில் தங்கக் கவசங்கள் மின்னுகின்றன. உள்ளே மூலவர் அகோர மூர்த்தியாய் காட்சி தருகிறார். கீழே பழமையான லிங்கமும் ஆவுடையாரும் உள்ளனர்.

தொடுவானத்தின் எல்லையற்ற காட்சிகளும் , வெண்மையான மணல் துகள்களில் நுரை பொங்கப் பரவும் நீரும் எல்லைக் கோடு போல் அணி வகுத்து அசையும் பனை மற்றும் தென்னை மரங்களும் சுற்றுலாப் பயணிகளை கவரும் சிறப்பு கொண்டதாக காணப்படுகின்றது.

தியானம் செய்வதற்கும் கற்பனைகளைத் தட்டி விடுவதற்கும் இதைவிடச் சிறந்த இடம் அமைவது அரிது என்று கூறலாம். தினமும் காலையில் இதன் அழகைப் பார்த்து ரசிப்பதற்கு கூட்டம் அலை மோதுகிறது.

புனிதமும் சுற்றுலாவும் ஒன்று சேர்ந்த இடமாக கோவில் காணப்படுகின்றது.

கோயிலில் கணபதி, அனுமன், சுப்பிரமணியர், நவக்கிரகங்கள் போன்ற துணை தெய்வங்களுக்கும் தனித்தனியாக சந்நிதிகள் உள்ளன.

ஆலயத்துக்குப் பின்னால் இரு அழகான தீர்த்தக் குளங்கள் உள்ளன. இந்த பிரம்மாண்டமான கோவில் சிறப்பினை கூற பல வரலாற்று கதைகளும் உண்டு.


கைலாயம் வந்த இலங்கை மன்னன்..

ஒரு சமயம் இராவணன் சிவனிடமிருந்து ஆத்ம லிங்கத்தைப் பெற வேண்டிக் கைலாயம் சென்று கடுந்தவம் புரிந்தான். அவரும் ஒரு நிபந்தனையுடன் அதைக் கொடுத்துள்ளார். அதை அவன் கையில் தாங்கிச் செல்ல வேண்டும். தவறிக் கீழே வைத்தால் அது வைத்த இடத்திலேயே புதையுண்டு விடும் .

இராவணனும் மிகுந்த பக்தியுடன் லிங்கத்தை எடுத்துக்கொண்டு இலங்கையை நோக்கிச் செல்ல ஆரம்பித்தான். இது தேவர்களுக்கு வயிற்றில் புளியைக் கரைத்தது. ஏனென்றால், அதை அவன் இலங்கையில் வைத்தால் எவரும் வெல்ல முடியாதவனாகி விடுவான். இதை முறியடிக்க விஷ்ணுவின் உதவியுடன் ஒரு திட்டம் தீட்டப்பட்டுள்ளது.

இராவணன் கோகர்ணா என்ற இடத்தை அடைந்தபோது, திருமால் தன்னுடைய சக்ராயுதத்தினால் சூரியனை மறைத்தார். பொழுது சாய்ந்து விட்டது என்று நினைத்து இராவணன் சந்தியாவந்தனம் செய்ய முற்பட்டான்.

லிங்கத்தைக் கீழே வைக்க முடியாதே! தூரத்தில் ஒரு அந்தணச் சிறுவன் வந்து கொண்டிருப்பது தெரிந்தது. அவனை அழைத்து விஷயத்தைச் சொன்னான். அவனும் ஒரு நிபந்தனை போட்டான். "குறிப்பிட்ட நேரத்துக்கு பிறகு மூன்று முறை அழைப்பேன் . நீர் வராவிட்டால் கீழே வைத்து விடுவேன் என்று சொன்னான்.

குறித்த சிறுவன் சொன்னது போல அழைத்துள்ளான். இராவணனால் வர முடியவில்லை. சிறுவனும் ஒரு நல்ல நேரம் பார்த்துக் கீழே லிங்கத்தை வைத்து விட்டான். ஓடி வந்தான் இராவணன். சுதர்சனர் விலகினார். கதிரவனின் ஒளி படர்ந்தது.

இராவணனுக்கு தேவர்களின் நாடகம் புரிந்தது. ஆவேசமடைந்து உறையை ஒரு பக்கம் எறிந்தான். மூடியை இன்னொரு பக்கம் எறிந்தான். சுற்றியிருந்த வஸ்திரத்தை மற்றொரு பக்கம் எறிந்தான். ஒவ்வொன்றும் ஒரு லிங்கமாக மாறிப் புனிதத் தலமாக உருப்பெற்றது.

வஸ்திரம் விழுந்த இடம் அகோர மூர்த்தியாக மிர்தேஷவர் என்று ஆகியது. கடற்கரை அருகில் ஒரு மலையின் மீது விழுந்தது. அதுதான் கன்துகா மலை என்று அழைக்கப்பட்டுள்ளது.

இது புனித தலமானது. சுற்றுலா பயணிகளினால் அதிகமாக கவரப்பட்டு சுற்றுலாத் தலமாகவும் இன்று வரையும் காணப்படுகின்றது.

http://www.canadamirror.com/srilanka/04/143408

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக