தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 24 அக்டோபர், 2017

ஹிட்லரின் முகத்தில் முத்தமிட்ட அமெரிக்க பெண்!!


ஜேர்மன் சர்வாதிகாரி ஹிட்லரை அமெரிக்க பெண்மணி ஒருவர் பொதுவெளியில் முத்தமிட்ட காட்சிகள் அடங்கிய காணொளி ஒன்று தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த சம்பவம் 1936 ஆம் ஆண்டு பெர்லின் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்ற காலகட்டத்தில் நடந்துள்ளது.

ஜேர்மானிய விவசாயி ஒருவரை திருமணம் செய்து அங்கேயே குடியேறியிருந்த அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தை சேர்ந்த Carla de Vries என்பவர் தான் அவர்.

சம்பவத்தின்போது 40 வயதான கார்லா முக்கிய நபர்களின் ஆட்டோகிராப் சேகரிப்பதில் அலாதி ஆர்வம் கொண்டவர்.

இந்த நிலையில் பெர்லின் ஒலிம்பிக் போட்டிகளை கண்டு ரசித்துக் கொண்டிருந்த ஹிட்லரை அணுகி ஆட்டோகிராப் பெற அவர் முயன்றுள்ளார்.




முக்கிய தளபதி August von Mackensen உடன் நீச்சல் போட்டியை கண்டு களித்துக் கொண்டிருந்தர் ஹிட்லர். ஹிட்லரை மிக அருகாமையில் வைத்து புகைப்படம் எடுக்க வேண்டும் என்பது கார்லாவின் நீண்ட நாள் விருப்பமாகவும் இருந்தது.

ஆனால் ஹிட்லரை பாதுகாத்து வந்த Schutzstaffel பாதுகாவலர்களால் பல முறை மறுக்கப்பட்டு வந்துள்ளார். இருப்பினும் கார்லா தமது பிரியமான ஹிட்லரை மிக நெருக்கத்தில் புகைப்படம் எடுத்துள்ளார்.

ஆனால் அதனையடுத்து கார்லா செய்த செயல் உலகம் முழுக்க பேசப்படும் நபராக மாற்றியது. ஹிட்லரை நெருங்கிய கார்லா சிறப்பு காவலர்களின் எதிர்ப்பையும் கடந்து, அவரது முகத்தை இரண்டு கைகளாலும் வாரி எடுத்து கன்னத்தில் முத்தமிட்டுள்ளார்.

ஹிட்லர் முதலில் வெட்கத்தால் சிரித்தவாறே பின்னோக்கி நகர்ந்துள்ளார். ஆனால் கார்லா பிடிவாதமாக ஹிட்லரை மிக நெருக்கமாக சென்று முத்தமிட்டுள்ளார்.

இதைக்கண்டு அருகில் இருந்த தளபதி Mackensen வெடித்துச் சிரித்ததுடன் கார்லாவை தள்ளி விட்டுள்ளார். ஆனால் அந்த விளையாட்டு அரங்கத்தில் இருந்த 20,000 பார்வையாளர்கள் ஒன்றிணைந்து கரவொலி எழுப்பி ஆதரவளித்துள்ளனர்.
இதனிடையே கார்லாவின் செயல் ஹிட்லருக்கு கோபத்தை வரவழைத்துள்ளது. தம்மை நெருங்கும் ஒரு நபரை தமது பாதுகாவலர்களால் தடுத்து நிறுத்த முடியாமல் போனதன் காரணத்தை விசாரிக்க உத்தரவிட்ட ஹிட்லர், உடனடியாக Schutzstaffel படையினரில் பலரை தகுதி நீக்கம் செய்ததுடன் பலரது பதவியையும் பறித்துள்ளார்.
ஜேர்மனியில் நடைபெற்ற பெர்லின் ஒலிம்பிக் போட்டிகள் தான் முதன் முறையாக உலகெங்கிலும் உள்ள 41 நாடுகளில் ஒளிபரப்பு செய்யப்பட்டது.




http://news.lankasri.com/germany/03/135267

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக