தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, 29 அக்டோபர், 2017

இளமையாக இருக்க ஜப்பானியர்கள் பயன்படுத்தும் ரகசியம் தெரியுமா?


நெல்லின் மேலோட்டை நீக்கி விட்டு, குறைந்த அளவு தோலோடு இருக்கும் அரிசி தான் பழுப்பு அரிசி. இது நம் சருமம் மற்றும் கூந்தலின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.
இந்த அரிசியை தான் ஜப்பானியர்கள் தங்களின் இளமை மாறாமல் இருப்பதற்கு பயன்படுத்துகின்றனர்.
பழுப்பு அரிசியை ஜப்பானியர்கள் எப்படி பயன்படுத்துகின்றனர்?
  • அரிசியை அழுக்கு நீக்கி சுத்தமாக கழுவி நீரில் 15 நிமிடம் ஊறவைத்து அந்த நீரை மட்டும் வடிகட்டி அதில் பஞ்சை நனைத்து முகம் மற்றும் கழுத்து பகுதியில் தடவி மசாஜ் செய்து 10 நிமிடம் கழித்து நீரில் முகத்தை கழுவ வேண்டும்.
  • பழுப்பு அரிசியை நன்றாக அரைத்து அதனுடன் 1 ஸ்பூன் யோகர்ட்டை சேர்த்து அதை முகத்தில் தடவி 10 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். இதை 2 வாரங்கள் தொடர்ந்து செய்தால் நல்ல பலன் கிடைக்கும்.
  • முகத்தை நன்றாக கழுவி பழுப்பு அரிசி ஊறவைத்த நீரில் பஞ்சை நனைத்து முகத்தில் தடவி 10 நிமிடங்கள் கழித்து முகம் காய்ந்தவுடன் நீரில் கழுவ வேண்டும்.
நன்மைகள்
  • பழுப்பு அரிசியில் உள்ள நார்ச்சத்து மற்றும் அத்தியாவசிய மினரல்கள், சருமத்தில் கட்டிகள் மற்றும் கொப்பளங்கள் வராமல் தடுக்கிறது.
  • சருமத்தில் அணுக்களின் வளர்ச்சியை அதிகரித்து, ரத்த ஓட்டத்தை சீராக்கி, சருமம் பளிச்சிட செய்கிறது.
  • சுருக்கம், கோடுகள், பருக்கள், கட்டிகள் மற்றும் சதை தொங்குவது போன்ற சேதமடைந்த சருமத்தை சரிசெய்ய உதவுகிறது.
  • பழுப்பு அரிசியின் மேல் தோலை சருமத்திற்கு பயன்படுத்துவதால் சருமத்தில் சுருக்கங்கள் வராமல் தடுக்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக