தொலைக்காட்சி!!

Search This Blog

Wednesday, October 11, 2017

தட்டினால் இசை வரும் குதிரை சிலை: எங்குள்ளது தெரியுமா?


விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள சேந்தமங்கலத்தில் சதுர்முகதுர்க்கம் எனும் கோட்டை அமைந்துள்ளது. இது தமிழ்நாட்டிலுள்ள சிதிலமடைந்த கோட்டைகளில் ஒன்றாகும்.

சதுர்முகதுர்க்கம் என்பது 4 வாசல்களை கொண்ட கோட்டை என்று பொருள்படும். இக்கோட்டை காடவராய மன்னர்களுள் ஒருவரான மணவாளப்பெருமான் காலத்திலும், அவரது மகன் கோப்பெருஞ்சிங்க காடவராயன் காலத்திலும் கட்டப்பட்டது.

இங்குள்ள கோவில் சுவற்றில் உள்ள மதில்கள் கோயிலுக்கு அரணாக மட்டுமின்றி போர்க்களப் பாதுகாப்பிற்கு கோட்டையாகவும் பயன்படுத்தப்பட்டதாம்.

கோவில் கோட்டையைச் சுற்றி அகழி அமைக்கப்பட்டுள்ளது. இக்கோட்டையிலுள்ள சிவன் கோயில் கிழக்கு நோக்கி கெடிலம் நதியை பார்த்தபடி அமைந்துள்ளது.

இக்கோவிலில் கண்ணைக் கவரும் பல்வேறு வகை சிற்பங்கள் மற்றும் கோவில் சாளரங்கள் கருங்கற்களால் செதுக்கப்பட்டுள்ளது. இதில் உள்ள பல்வேறு சிற்ப வடிவங்களே இக்கோவிலின் மிகப் பெரிய சிறப்புகளாக திகழ்கிறது.

அதிலும் இந்த கோவிலின் மேற்கூரையில் பாம்பு ஒன்று ஊர்ந்து செல்வதைப் போன்ற சிற்ப அமைப்பு தூரத்திலிருந்து பார்க்கும் போது நிஜ பாம்பைப் போலவே காட்சியளிக்கும்.

இந்த கோவிலின் மேற்கில் உள்ள நீராழி எனும் குளத்தில் நீர் எடுத்து சிவனுக்கு அபிஷேகம் செய்யப்படுகிறது.

இக்குளத்தின் வடகரையில் இரண்டு குதிரை சிலைகள் கருங்கல்லால் செய்யப்பட்டுள்ளது. இந்த குதிரையின் ஒவ்வொரு பாகத்திலும் தட்டும் போது பல்வேறு இசைகள் வருமாம்.

http://news.lankasri.com/travel/03/134236

No comments:

Post a Comment