தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 4 செப்டம்பர், 2017

மேகங்களுக்குள் மறைந்திருக்கும் ஐந்து அதிசயங்கள்! மெய் மறக்க வைக்கும் அற்புதங்கள்

சீனாவில் மலைத் தொடர்களுக்கும், அழகுக்கும் பஞ்சமில்லை என்றே கூறலாம். உலக அதிசயங்களில் ஒன்றான சீனப் பெருஞ்சுவர் இதற்கு சிறந்த எடுத்துக்காட்டாகும்.
அங்குள்ள மக்கள் பண்பாடுகள், மதம், கலாச்சாரம் என்பவற்றையும் பெரிதும் மதிக்கின்றார்கள். அதை பின்பற்றவும் செய்கின்றார்கள்.
அந்த வகையில் சீனாவில் அதிகமான இடங்கள் வணக்க ஸ்தலங்களாகவே காணப்படுகின்றன. சீனாவின் ஒவ்வொரு இடங்களும், ஒவ்வொரு வணக்க ஸ்தலங்களும் மெய்மறக்க வைக்கின்றன.
அவ்வாறான ஒரு இடம்தான் சீனாவின் Five-Old-Man Peak என்று அழைக்கப்படும் Wulao Peak (ஐந்து மலைத்தொடர்கள்.)
வட சீனாவின் ஷாங்க்ஸி (Shanxi) மாகாணத்தின் யாங்க்ஜி (Yongji) நகரில் வானத்தைதொடும் அழகுடன், மேகங்களுக்குள் மறைந்து இருக்கும் மலைத் தொடர்கள் தான் வூலோ மலை (Wulao Peak).
இந்த ஐந்து மலைத் தொடர்களையும் பார்க்கும் போது ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு எண்ணங்கள் தோன்றுகின்றன. பல்வேறு கோணங்களில் இருந்து பார்க்கும் போதும் ஒவ்வொரு வடிவங்களில் இந்த மலைகள் தெரிகின்றன.
சிலர் மீனவர்களைப் போன்று உணர்கின்றார்கள். மலைகளின் அடிவாரத்தில் இருந்து பார்க்கும் போது ஐந்து முதியவர்கள் அமர்ந்து இருப்பதைப் போன்று உணர்கின்றார்கள், மேலும் சிலர் பௌத்த துறவிகள் அமர்ந்திருப்பதைப் போன்று உணர்கின்றார்கள்.
இந்த ஐந்து மலைத் தொடர்களிலும், மூன்றாவது மலை மிகவும் உயரமானதுடன், ஆபத்தானது. நான்காவது மலை மிகவும் அழகானது, ஐந்தாவது மலை ஒப்பீட்டளவில் விரிவாக உள்ளது.
இங்கு சூரிய உதயம் மற்றும் சூரிய அஸ்தமனம் இரண்டையும் பார்வையிடலாம்.
மேகங்களுக்குள் மறைந்திருக்கும் அதிசயங்கள் என்றே இந்த மலைத் தொடர்களை கூற வேண்டும்.
திரைப்படங்களிலும் புகைப்படங்களிலும் தொழில்நுட்பங்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட பொய்யான மலைகளைக் கண்டு வியந்து போகும் மனிதர்கள், நிஜத்திலேயே அவ்வாறான அதிசயங்களைக் கண்டால் மெய்மறந்து போய் விடுவார்கள் என்பது உண்மையே.
http://www.tamilwin.com/special/01/157388

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக