தொலைக்காட்சி!!

Search This Blog

Friday, August 11, 2017

கருப்பான கால் முட்டி: பளிச்சிட செய்யும் முறை பற்றிய தகவல்!

கால்கள் மற்றும் கைகளின் முட்டி நம் உடலின் மற்ற பாகங்களை விட கருப்பாக இருக்கும்.
ஏனெனில் முட்டிகளில் வியர்வை சுரப்பிகள் இல்லாததால், அவை எளிதில் இறந்த செல்கள் மற்றும் அழுக்குகளை உள்ளிழுத்து தேக்கிக் வைத்து, முட்டியில் சொரசொரப்பு தன்மையை அதிகரித்து கருப்பாக மாற்றுகிறது.
தேவையான பொருட்கள்
  • சமையல் சோடா - 1 ஸ்பூன்
  • தேன் - 1 ஸ்பூன்
  • எலுமிச்சை சாறு - 1/2 மூடி
  • ஆலிவ் எண்ணெய் - 1 ஸ்பூன்
பயன்படுத்துவது எப்படி?
சமையல் சோடா, தேன், ஆலிவ் ஆயில் ஆகிய மூன்றையும் நன்றாக கலந்து பேஸ்ட் செய்து, அதில் சிறிது எலுமிச்சை சாற்றை பிழிந்து கலந்து அதை முட்டியில் தேய்த்து 1/2 மணி நேரம் ஊறவைத்து பின் நீரில் கழுவ வேண்டும்.
அதன் பின் கற்றாழையின் ஜெல்லை முட்டியில் தடவி காயவைத்து கழுவ வேண்டும். இம்முறையை வாரம் ஒருமுறை பின்பற்றி வந்தால், முட்டியிலுள்ள சொரசொரப்பு நீங்கி, முட்டியின் நிறம் மாறி பளிச்சிடும்.
http://news.lankasri.com/beauty/03/130430

No comments:

Post a Comment