தொலைக்காட்சி!!

Search This Blog

Saturday, July 8, 2017

கருப்பு, வெள்ளை நிறத்தில் மாறும் அதிசய விநாயகர்: எங்குள்ளது தெரியுமா?

குமரி மாவட்டத்தில் தக்கலை அருகே கேரளபுரம் எனும் ஊரில் உள்ள அரச மரத்தடியின் கீழ் நிறம் மாறும் அதிசய விநாயகர் சிலை ஒன்று உள்ளது.
இந்த விநாயகர் சிலையை திருவிதாங்கூர் மன்னர் வீரகேரள வர்மா தான் முதன் முதலில் பிரதிஷ்டை செய்தவர்.
விநாயகர் சிலை வைத்த ஆரம்பத்தில் அது அரை அடி உயரம் மட்டுமே இருந்ததாம். ஆனால் தற்போது அந்த விநாயகர் சிலை ஒன்றரை அடி உயரத்தில் அதிகரித்துள்ளதாக கூறுகின்றனர்.
அதுமட்டுமில்லாமல், இந்த விநாயகர் சிலையானது தை முதல் ஆனி வரை உள்ள காலத்தில் வெள்ளை நிறமாகவும், ஆடி முதல் மார்கழி வரை கறுப்பு நிறமாகவும் காட்சியளிக்கிறதாம்.
ஆடி மாதம் தொடங்கும் போது பிள்ளையாரின் தலை உச்சியிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக வெளுக்கத் தொடங்கி, தை மாதம் தொடங்கும் போது மெல்ல மெல்ல கறுக்கத் தொடங்குமாம்.
பின் ஆறாம் மாதம் வரை இந்த சிலையின் வெள்ளை நிறம் அப்படியே இருக்குமாம்.
இந்த விநாயகர் சிலையின் நிறத்தைப் பொறுத்து, அந்த சிலை அமைந்துள்ள அரச மரத்தின் நிறமும் மாறுகிறதாம். அதனால் இதை நிறம் மாறும் விநாயகர் என்றே அழைக்கிறார்கள்.
இங்கு கிணறு ஒன்று உள்ளது. இந்த கிணற்றில் நடக்கும் அதிசயத்தை இங்கு வரும் பக்தர்கள், அது விநாயகரின் விளையாட்டு என்று கூறுகின்றனராம்.
தனது நிறத்தை மாற்றிக் கொள்ளும் இந்த விநாயகர் சிலையை ஆய்வு செய்த ஆராய்ச்சியாளர்கள், இந்த சிலை உருவாக்கப்பட்ட கல் சந்திரகாந்தம் எனும் அபூர்வ வகை பாறையிலிருந்து பெறப்பட்டது.
அதனால் தான் இந்த சிலை நிறம் மாறும் தன்மையை கொண்டுள்ளது என்பதை கண்டுபிடித்து கூறியுள்ளனர்.
http://news.lankasri.com/travel/03/128369

No comments:

Post a Comment