தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 29 ஜூலை, 2017

பூவினும் மெல்லிய பூங்கொடி


இன்று அனைத்துமே ஏமாற்றுக் களாக !என்று தொல்லைக்காட்சிகள் வந்தனவோ அன்றே உண்மைகள் உறங்கி காட்சிகள் யாவும் கண்களுக்கு பொய் சொல்கின்றன!திறமை துவண்டுவிட்டது,கவர்ச்சி கட்டுப்பாடின்றி அலைகின்றது!பின்னணி பாடுகின்றவர் தேர்விலும் chemisty கேட்கிறார்கள்!சாதாரண படங்களில் கூட கட்டில்காட்சி,முத்தக்காட்சி முக்கியமாகிறது!கனவுக்காட்சியாக அவை மக்களை மதம் கொள்ள வைக்கின்றன!கேட்க நல்லவர் இங்கு எங்கு உள்ளனர்!அனைவரும் பெண்ணுக்கு சுதந்திரம் ,கருத்துக்கு சுதந்திரம் என்றபடி கட்டில் சுகத்துக்கு கட்டிய பெண்டாட்டிக்கு ,மாலையிட்ட கணவனுக்கு துரோகம் செய்கின்றனர்!மருத்துவம் என்ற பெயரில் கட்டித்தழுவி காமத்தை கரைகின்றனர்!கட்டிப்பிடிப்பதில் காமம் இல்லை என்பதை நிரூபிக்க ஆங்கிலப்படம் ஒன்றின் காட்சியில் வருவதை இவர்களிடமும் செய்து காமம் இருந்தால் அந்தப்பாகத்தை அறுத்துவிடவேண்டும் தண்டனையாக!இப்படி திறமைக்கு மதிப்பில்லை,கவர்ச்சிக்கும் கட்டிப்பிடிப்புக்கும் மதிப்புயர மக்களா காரணம்!இச்சையை தீர்ப்பது மக்களா மானம் கெட்ட இயக்குனரா?

கண்ணன் வருவான் என்ற படம்,,, பாடல் இயற்றியவர் கவிஞர் கண்ணதாசன்,,, டி எம் எஸ் கோரஸ் பாடலும் பி சுசிலா பாடலும் ஆக இரண்டு முறை இந்தப்பாடல் படத்திற்காக ஒலிப்பதிவு செய்யப்பட்டது,,
,, பூவினும் மெல்லிய பூங்கொடி ,,,,,
பொன் நிறம் காட்டும் பைங்கிளி ,,,
சிறு மாவிலை பின்னிய தோரணம் ,
இரு மைவிழி நாடக காவியம் ,,,,
அவள் வாழ்க.. தினம் வாழ்க.. 
இந்த ஏழை நெஞ்சின் கோவிலில் தெய்வப்பெண்ணாக,,,,,, மூன்றாம் பிறையில் பார்த்தது 
பூரண நிலவாய் ஆனது ,,,,,
பிள்ளை தமிழை கேட்டது ,,,,
கன்னித்தமிழில் பாடுது ,,,
கண்கள் பேசும் ஜாடை என்னவோ ,,,,கால்கள் போகும் பாதை என்னவோ ,,,
பெண்மை மாலை சூடும் அல்லவோ ,
சொந்த வீடும் மாறும் அல்லவோ ,,,,சேலை கட்டும் தேன் நிலா ,,,,,
வாழ்வில் இன்று திருவிழா ,,,,
பருவம் இந்த பெண்ணிலா ,,,,
பார்க்க போகும் கண்ணிலா ,,,,

அந்த வானில் செல்லும் மேகமே 
அந்த வானுகென்ன சொந்தமோ ,,,,
அன்று நானும் அந்த மேகமே ,,,
இனி நாளை காலம் மாறுமோ ,,,,

பூவினும் மெல்லிய பூங்கொடி 
பொன் நிறம் காட்டும் பைங்கிளி 
சிறு மாவிலை பின்னிய தோரணம் 
இரு மைவிழி நாடக காவியம் 
அவள் வாழ்க.. தினம் வாழ்க.. 
இந்த ஏழை நெஞ்சின் கோவிலில் தெய்வப்பெண்ணாக,,,,,

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக