தொலைக்காட்சி!!

Search This Blog

Monday, July 17, 2017

வாழைப்பழத்தின் தோல்.. இப்படியும் பயன்படுமா? அற்புதம் இதோ

வாழைப்பழத்தை சாப்பிட்டு விட்டு அதன் தோல் தேவையற்றது என்று நம்மில் பலரும் தூக்கி போட்டு விடுவோம். ஆனால் உண்மையில், வாழைப்பழத்தின் தோல் நமக்கு பல்வேறு பயன்களை அளிக்கிறது.
வாழைப்பழத்தின் தோல் எதற்கெல்லாம் பயன்படுகிறது?
  • வாழைப்பழத்தின் தோலை சில்வர் பொருட்கள் மீது தேய்த்து, வெதுவெதுப்பான நீரில் கழுவினால், பளபளப்பாக இருக்கும்.
  • வாழைப்பழத்தின் தோலைக் கொண்டு ஷூவைத் தேய்த்தால், ஷூவானது பாலிஷ் செய்தது போன்று பொலிவாக இருக்கும்.
  • வீட்டினுள் வளர்க்கும் செடிகளில் தூசி படிந்து, அசிங்கமாக இருந்தால், அந்த செடியின் இலைகளை வாழைப்பழ தோலினால் துடைத்தால், பிரகாசிக்கும்.
  • தண்ணீர் உள்ள டேங்குகளை சுத்தம் செய்ய வாழைப்பழத்தின் தோலைக் கொண்டு துடைத்து கழுவ வேண்டும். இதனால் டேங்க்கில் உள்ள நச்சுக்கள் அனைத்தும் வெளியேறி சுத்தமாகும்.
  • கண்ணாடி டேபிளில் மெழுகு படிந்திருந்தால், அதை போக்க, வாழைப்பழத்தின் தோலைக் கொண்டு தேய்க்க வேண்டும். இதனால் மெழுகு மென்மையாகி விடும். அதன் பின் ஈரமான துணியை வைத்து துடைத்தால், எளிதில் போய்விடும்.
  • மரத்தாலான பொருட்களை வாழைப்பழத்தின் தோலைக் கொண்டு தேய்த்து, 10 நிமிடம் கழித்து ஈரமான துணியால் துடைத்து எடுத்தால் பளிச்சென்று இருக்கும்.
  • கைகளில் மைக்கறைகள் இருந்தால், அதை போக்க வாழைப்பழத்தின் தோலைக் கொண்டு கைகளை நன்கு தேய்த்து, பின் சோப்பு போட்டு கழுவ வேண்டும்.
http://news.lankasri.com/home-garden/03/128884

No comments:

Post a Comment