தொலைக்காட்சி!!

Search This Blog

Friday, July 28, 2017

இதில் நீங்கள் பார்த்த முதல் உருவம் எது? உங்களின் குணாதிசயம் இதுதான்

சைக்காலஜிக்கல் விளையாட்டுகளின் மூலக்கூற்றின் படி, படங்களில் இருந்து, நாம் தேர்வு செய்யும் ஒரு உருவத்தை வைத்து, நம்முடைய குணாதிசயம், பண்பு, அச்சம் போன்றவை எப்படிப்பட்டதாக இருக்கும் என்பதை கூறிவிடலாம்.
சிறிய பெண் குழந்தை
இந்த படத்தை பார்த்தவுடன் உங்களுக்கு முதலில் தெரியும் உருவம் சிறிய குழந்தையாக இருந்தால், நீங்கள் குழந்தை பருவத்தில் நடந்த சில ஆழமான உணர்வுகளை புதைத்து வைத்துள்ளீர்கள் என்று அர்த்தம்.
அது உங்களுக்குள் ஏற்பட்ட அதிர்ச்சி, பிரச்சனைகள், குழந்தை பருவத்தில் நடந்த எந்த விடயமாக கூட இருக்கலாம்.
பட்டாம்பூச்சி
இந்த படத்தை பார்த்தவுடன் உங்களுக்கு முதலில் தெரியும் உருவம் ஒரு பட்டாம்பூச்சியாக இருந்தால், உங்களுக்கு எதிர்காலத்தின் மீதான நம்பிக்கை வலுவாக இருக்கும்.
என்ன பிரச்சனைகள் வந்தாலும், எதிர்காலத்தின் மீதான நம்பிக்கையை நீங்கள் இழக்க மாட்டீர்கள். இதனால், உங்கள் வாழ்க்கை நீங்கள் நினைத்தது போல அமையும்.
ஸ்ட்ராபெர்ரி
இந்த படத்தை பார்த்தவுடன் உங்களுக்கு முதலில் தெரியும் உருவம் ஒரு ஸ்ட்ராபெர்ரியாக இருந்தால், நீங்கள் ஒரு உண்மையான இதயத்தை தேடும் நபர்.
நீங்களாக காயப்பட்டுக் கொண்டு, மேலும் தொடர்ந்து உங்களை சுற்றி இருக்கும் நபர்களை நம்பிக் கொண்டே இருக்கிறீர்கள் என்பதை உணர்த்துகிறது.
மண்டை ஓடு
இந்த படத்தை பார்த்தவுடன் உங்களுக்கு முதலில் தெரியும் உருவம் மண்டை ஓடாக இருந்தால், நீங்கள் மற்றவரின் பார்வையில் இருந்து ஒரு பொருளை, ஒரு விடயத்தை வேறு வித்தியாசமான பார்வையில் பார்க்கும் நபராக இருப்பீர்கள்.
உங்களை விரும்பும் நபர்கள் இறந்து விடுவார்களோ என்ற அச்ச உணர்வு இருக்கும். அவர்கள் மீது அதிக அக்கறை எடுத்துக் கொள்வீர்கள். ஒருவரின் மரணத்தை ஏற்றுக் கொள்வது என்பது உங்களுக்கு மிகவும் கடினமான ஒன்று.
மரங்கள்
இந்த படத்தை பார்த்தவுடன் உங்களுக்கு முதலில் தெரியும் உருவம் மரமாக இருந்தால், நீங்கள் இயற்கையுடன் அதிக இணைப்பு கொண்டிருக்கும் நபராக இருப்பீர்கள். உணர்வு ரீதியான பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வுக் காணும் நபராக இருப்பீர்கள்.
http://news.lankasri.com/lifestyle/03/129614

No comments:

Post a Comment