தொலைக்காட்சி!!

Search This Blog

Tuesday, July 4, 2017

செல்வத்தை நோக்கிய ஓட்டத்தில் பெற்று பெயரிட்டு பாசம் வைத்தவர்களிடம் பேச கூட நேரமில்லை!


படிக்கும்போதே வலிப்பது!

நண்பனுடன் அவனது வீட்டிற்குச் சென்றிருந்தேன்...
வாசலில் அவனது பாட்டி கயிற்றுக்கட்டிலில் கிடந்தார்...
நண்பன் உள்ளே போய்விட்டான்...
நான் : என்ன பாட்டி நல்லா இருக்கிங்களா..?
பாட்டி : நல்லாருக்கேன் ராசா.. நீ ராசா..?
நான் : நல்லாருக்கேன் பாட்டி..
இடையே எனது Android தொலைபேசி அழைத்தது...
பேசி முடித்தேன்...
பாட்டி : என்னாய்யா அது, டிவி பொட்டி கணக்கா..?
நான் : இதுவா பாட்டி..
இது புதுசா வந்துருக்குற ஃபோனு..
சட்டென்று ஞாபகம் வந்தவனாய் அதிலிருந்த Talking Tom-ஐ எடுத்துக்காட்டினேன்...
பாட்டி இதுகிட்ட பேசினா, அத அப்புடியே திரும்ப பேசும்...
பாட்டி : என்ன ராசா சொல்றே..?
Talking Tom :என்ன ராசா சொல்றே..?
நானும், பாட்டியும், Talking Tom-மும் சிரித்தோம்..
பிறகு வீட்டினுள் சென்றேன்...
எல்லோருடனும் பேசிவிட்டு வெளியில் வந்தேன்...
வாசலில் பாட்டி...
நான் : போயிட்டு வாரேன் பாட்டி...
பாட்டி : ராசா...
நான் : என்னா பாட்டி..?
பாட்டி : ஏய்யா.. அந்தபூனகுட்டிய இங்க உட்டுட்டு போயா..!
நான் : என்ன பாட்டி சொல்றிங்க..?
பாட்டி : ஆமாய்யா...
இந்த வயசான காலத்துல இங்க எங்கிட்ட யாருமே பேச மாட்றாங்கயா...
நா செத்துபோறப்ப அந்த பூனகுட்டிகிட்டயாச்சும் பேசிட்டே சாவுறேன்யா...
(வீட்டில் உள்ள முதியோர்களிடம் பேச நேரம் ஒதுக்குங்கள், அவர்கள் உணர்வுகளுக்கும் மதிப்பளியுங்கள்...)
செல்வத்தை நோக்கிய ஓட்டத்தில் பெற்று பெயரிட்டு பாசம் வைத்தவர்களிடம் பேச கூட நேரமில்லை!  என்றால் நாம் வாழ்வதற்கே அர்த்தமில்லை!
நாமும் முதியோர் ஆவோம் என்ற எண்ணத்தோடு
பழகுங்கள்... பேசுங்கள்... பாசம் காட்டுங்கள்!!

No comments:

Post a Comment