தொலைக்காட்சி!!

Search This Blog

Saturday, July 22, 2017

முருங்கை பற்றி தெரிந்துகொள்ளுங்கள்

முருங்கை மரத்தின் காய், வேர், இலை, பூ, பட்டை மற்றும் பிசின் ஆகியவை மூலம் அற்புதமான மருத்துவ பலன்களை பெறலாம்.
முருங்கையின் மருத்துவ பலன்கள்?
  • முருங்கை வேரின் சாற்றை பாலில் சம அளவு கலந்து குடித்து வந்தால், விக்கல், இரைப்பு, கீழ் வாய்வு, உள் உறுப்பு வீக்கம், முதுகுவலி போன்ற பிரச்சனைகள் குணமாகும்.
  • முருங்கை மரத்தின் பிசினை எடுத்து, அதை தேங்காய் எண்ணெய்யுடன் கலந்து, அதில் சில துளிகள் காதில் விட்டால், காதில் உள்ள புண்கள் எளிதில் குணமாகும்.
  • முருங்கை மரத்தின் பட்டை மற்றும் திப்பிலி ஆகிய இரண்டையும் சம அளவு எடுத்து பொடி செய்து, தினமும் 2 கிராம் அளவு பொடியை தேனில் கலந்து சாப்பிட்டு வந்தால், தொண்டையின் கபம் குணமாகும்.
  • முருங்கை பட்டையின் சாறு மற்றும் குப்பைமேனி கீரையின் சாறு இரண்டையும் சேர்த்து நல்லெண்ணெய்யில் காய்ச்சி, சருமத்தில் தடவினால் கரப்பான், சொரி சிரங்கு போன்ற தோல் நோய்கள் குணமாகும்.
  • தினசரி உணவில் அடிக்கடி முருங்கைக் காயை அடிக்கடி சமைத்து சாப்பிட்டு வந்தால், கருப்பையின் வலிமை அதிகரிக்கும்.
  • மிளகு, மஞ்சள் மற்றும் உப்புடன் முருங்கைக் காயை சேர்த்து வேகவைத்து சாப்பிட்டு வந்தால், கபம் மற்றும் இருமல் பிரச்சனை குணமாகும்.
  • 50 கிராம் முருங்கைப் பிசினிஅ 1 லிட்டர் தண்ணீரில் இரவு முழுவதும் ஊறவைத்து, மறுநாள் காலையில் அந்த நீரை குடித்து வந்தால், ஆண்மைக் குறைபாடு ஏற்படாது.
http://news.lankasri.com/medical/03/129212

No comments:

Post a Comment