தொலைக்காட்சி!!

Search This Blog

Sunday, July 9, 2017

வவுனியாவில் சுமார் 1,50,000 ஆண்டு பழைமை வாய்ந்த அங்போபுர சுமேரியன் கல்லறை, புதையல் திருடர்களினால் அழிப்பு!

வவுனியாவில் சுமார் 1,50,000 ஆண்டு பழைமை வாய்ந்த அங்போபுர சுமேரியன் கல்லறை, புதையல் திருடர்களினால் அழிக்கப்பட்டுள்ளதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.
அந்த கல்லறையை பாதுகாக்க தொல்பொருள் திணைக்களம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரி அந்தப் பகுதி மக்கள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
இந்த கல்லறை பகுதியை விடுதலைப் புலிகளே அழிக்கவில்லை. ஆனால் தற்போது திருடர்களால் அழிக்கப்படுவதாக மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.
கல்லறை அமைந்துள்ள பகுதிக்கு கிராம மக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.
சுமேரியன் கல்லறை 25 ஏக்கர் நிலப்பரப்பாகும். அங்கு தேக்கு மரங்களை வெட்டும் மோசடி வர்த்தகம் தற்போது முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகி்னறது.
ஆரம்பகால மனிதர்களின் 89 கல்லறைகள் அங்கு பாதுகாக்கப்பட வேண்டிய நிலையில் உள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று சுட்டிக்காட்டியுள்ளது.
http://www.tamilwin.com/statements/01/151411

No comments:

Post a Comment