தொலைக்காட்சி!!

Search This Blog

Tuesday, June 20, 2017

ஸ்ரீரங்கம் கோவிலில் ஒழிந்துள்ள மர்மம்.. கொத்து கொத்தாய் இறந்த மக்கள் வீரம் !! காரணம் தெரியுமா?

பல நூற்றாண்டுகளாக காவிரி நதிக்கரையில் ஒய்யாரமாய் வீற்றிருக்கும் ஸ்ரீரங்கநாதரின் ஸ்ரீரங்கத்துக்கு நாம் இன்றளவிலும் சென்று வழிபட்டு வருகிறோம். ஆனால் இந்த கோயிலால் இறந்தவர்களின் வரலாற்றைத் திரும்பி பார்க்கும்போது நம் கண்களில் இன்றும் கண்ணீர் சுரந்து வெளியேறுகிறது. அப்படி என்னதான் வரலாறு தெரியுமா இத்தனை பேர் இறந்தது எப்படி என்பது தெரியுமா? வாருங்கள் பார்க்கலாம்
ஸ்ரீரங்கம்
ஸ்ரீரங்கம், திருச்சியில், அமைந்துள்ள, மனதை தன் வசப்படுத்தக்கூடிய கண்கவர் தீவு நகரமாகும்.ஸ்ரீரங்கம், மகாவிஷ்ணுவின் எட்டு முக்கிய திருத்தலங்களுள் முதல் திருத்தலமாகக் கொண்டாடப்படும் தனிப்பெருமை வாய்ந்ததாகும்.
ஸ்ரீரங்கத்திலுள்ள விஷ்ணு கோயில், இத்திருத்தலங்களுள் முதலாவது மட்டுமல்ல; 108 விஷ்ணு கோயில்களுள் மிக முக்கியமான கோயிலாகவும் கருதப்படுகிறது.
இத்தனை இறப்புகளுக்கு காரணம் என்ன?
இந்த கோயிலால் நிறைய பேர் தங்கள் இன்னுயிரை இழந்துள்ளனர். அதாவது கிட்டத்தட்ட அந்த காலத்தில் வாழ்ந்த இவ்வூரின் சரிபாதி பேர்.
வண்ணம் பூசப்படாததற்கு காரணம் தெரியுமா?
இந்த ஸ்ரீரங்கம் கோயில் கோபுரம் வண்ணம் பூசப்படாமல் நிறைய ஆண்டுகளாக இருந்தது. இதற்கு காரணமாக சில மர்மக்கதைகளை சொல்கின்றனர் இக்கோயில் பக்தர்கள்.
என்ன மர்மம்?
அலாவுதீன் கில்ஜி எனும் மன்னன் தென்னகத்தே புகுந்து அனைத்து கோயில்களையும் அதன் செல்வங்களையும் அனுபவிக்கத் துணிந்தான். அவன் படைகளையும் அனுப்பி அனைத்தையும் கவர ஆணையிட்டான். அப்போதுதான் ஸ்ரீரங்கம் எனும் அற்புத தீவு அவன் கண்ணுக்கு புலப்பட்டது.
இதன் கோயிலை ஒரு கண் வைத்திருந்த அம்மன்னன் தக்க சமயம் பார்த்து ஆட்களை அனுப்பி இந்த கோயிலின் நகைகளை கொள்ளையடித்துச் சென்றான்.
கொள்ளையடிக்கப்பட்ட பொருள்களுள் எதையும் விரும்பாத மன்னனின் மகள் ஆசை பட்டது எல்லாம் நகைகளுடன் கொள்ளையடிக்கப்பட்ட பெருமாளின் சிலை மீதுதான்.
இளவரசி தனக்கு அருகே அதனை ஒரு பொம்மை போல வைத்து விளையாடி வந்துள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
ஆடல்கலையால் மீட்கப்பட்ட சிலை
ஆடல் பாடல் கலைகளில் நல்ல அறிவு கொண்டிருந்த மன்னனை, ஸ்ரீரங்கம் ஊரார் சந்திக்க, ஆட்டம் ஆடி பாட்டுப் பாடி பரிசாக சிலையை கேட்டனர். மன்னனும் ஒப்புக்கொண்டு சிலையை வழங்கிவிட்டான்.
கோபம் கொண்ட இளவரசி, நேரடியாக யானை மீதமர்ந்து ஸ்ரீரங்கம் சென்று அங்கேயே உயிர் விட்டாள். அவளுக்காக ஸ்ரீரங்கத்தில் ஒரு சன்னதியே உள்ளது தெரியுமா?
மீண்டும் படையெடுப்பு
மீண்டும் படையெடுக்க வந்த மன்னர் படைக்கு அஞ்சாமல் பாதிபேர் நேருக்கு நேர் மோத, மீதி பேர் சிலையை கொண்டு சென்றனர்.
சிலையை காணாத மன்னர் ஊரையே அழிக்குமாறு உத்தரவிட்டுள்ளார். இதை படைகள் பின்பற்றி அனைவரையும் வெட்டிச் சாய்த்தது..
பல்லாயிரக்கணக்கான மக்கள் இதனால் உயிரிழந்தனர். ஊரே வெறிச்சோடியது. சிலையை யார்யாரோ கொண்டு சென்றுவிட்டனர்.
40 ஆண்டுகளுக்கப் பிறகுதான் இந்த சிலை ஸ்ரீரங்கத்தை அடைந்ததாக கூறுகின்றனர்.
- See more at: http://www.manithan.com/news/20170620127829?ref=rightsidebar-tamilwin#sthash.Lwa4jXgz.dpuf

No comments:

Post a Comment