தொலைக்காட்சி!!

Search This Blog

Friday, June 2, 2017

உங்க ராசிப்படி பிரச்சனை இதுல மட்டும் தான் இருக்குமாம்!

ஜோதிடத்தின் படி ஒவ்வொரு ராசிக்காரர்களும் எந்த வகை பிரச்சனையினால் அவஸ்தைபடுவார்கள் என்பதை கூறிவிடலாம்.
மீனம்
மீன ராசிக்காரர்கள் சளி மற்றும் காய்ச்சலால் தான் அவஸ்தைப்படுவார்கள். இதனைத் தவிர்க்க வேண்டுமானால், இவர்கள் சிக்கன், மட்டன், பீட்ரூட், சிட்ரஸ் பழங்கள் போன்றவற்றை அதிகம் உட்கொள்ள வேண்டும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்கள் உயர் ரத்த அழுத்தத்தால் கஷ்டப்படுவார்கள். இதனை தவிர்க்க பீச், பேரிக்காய், அத்திப் பழம், எலுமிச்சை, பேரிச்சம் பழம், மாதுளை போன்றவற்றை அதிகம் உட்கொள்ள வேண்டும்.
மகரம்
மகர ராசிக்காரர்கள் எலும்பு தொடர்பான பிரச்சனையை அதிகம் சந்திப்பார்கள். இதனை தவிர்க்க, முட்டைக்கோஸ், பட்டாணி, உருளைக்கிழங்கு மற்றும் பசலைக்கீரை, ஓட்ஸ், பால் போன்றவற்றை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இடுப்பிலும், தொடையிலும் தான் கொழுப்புக்கள் அதிகமாக சேரும். எனவே இந்த ராசிக்காரர்கள் தானியங்கள், ஸ்கிம்டு மில்க், மீன், தயிர் போன்றவற்றை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்கள் அதிகம் நோய்த் தொற்றுகளால் அவஸ்தைப்படுவார்கள். எனவே இந்த ராசியைக் கொண்டவர்கள், பால், தயிர், வால்நட்ஸ், பாதாம், அன்னாசி போன்றவற்றை அதிகம் சேர்த்து வந்தால், உடலின் நோயெதிர்ப்பு சக்தி அதிகரித்து நோய்த்தொற்றுகளில் இருந்து விடுபடலாம்.
துலாம்
துலாம் ராசிக்காரர்கள் பதப்படுத்தப்பட்ட உணவுகளையும், ஆல்கஹால் அருந்துவதையும் கட்டாயம் குறைத்துக் கொள்ள வேண்டும்.
ஏனெனில் இதனால் பல பிரச்சனைகளை சந்திப்பார்கள். அதை தடுக்க பீட்ரூட், சோளம், கேரட், ஆப்பிள், உலர் திராட்சை போன்றவற்றை உட்கொள்வது நல்லது.
கன்னி
கன்னி ராசிக்காரர்கள் செரிமான பிரச்சனைகளை அதிகம் சந்திப்பார்கள்.
எனவே இந்த ராசிக்காரர்கள் நார்ச்சத்து அதிகம் உள்ள ஓட்ஸ், வாழைப்பழம், பப்பாளி போன்ற உணவுகளை உட்கொண்டு வந்தால், செரிமான பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்கள் கொழுப்பு குறைவான உணவுகளை உட்கொள்வது நல்லது. அதிலும் இவர்கள் கடல் உணவுகள், எலுமிச்சை, தேங்காய், பீட்ரூட் போன்றவற்றை அதிகம் உட்கொள்ள வேண்டும்.
கடகம்
கடக ராசிக்காரர்கள் கலோரிகள் அதிகம் நிறைந்த உணவுகளை உட்கொள்வதால், அவர்கள் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். இதை தடுக்க பெர்ரிப் பழங்கள், பச்சை காய்கறிகள், மீன் போன்றவற்றை சாப்பிட வேண்டும்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்கள் அதிக மன அழுத்தத்திற்கு உள்ளாவார்கள். எனவே மன அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும் சிறந்த உணவுகளான பாதாம், மோர், கிரேப் ஃபுரூட், அஸ்பாரகஸ் போன்றவற்றை உட்கொள்வதோடு, தண்ணீரை அதிகம் குடிக்க வேண்டும். இதனால் மன அழுத்தம் குறைவதோடு, இதய நோய்கள் வராமலும் தடுக்கலாம்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்கள் வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனையால் கஷ்டப்படுவார்கள். இதனை தடுக்க பசலைக்கீரை, காய்கறி சாலட், கிரான்பெர்ரி மற்றும் பருப்பு வகைகளை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
மேஷம்
மேஷ ராசிக்காரர்கள் தலைவலி மற்றும் மூக்கடைப்பு பிரச்சனையால் கஷ்டப்படுவார்கள்.
எனவே இவர்கள் ஆப்ரிக்காட், வாழைப்பழம், அத்திப்பழம், ப்ராக்கோலி, பீன்ஸ் போன்றவற்றை சாப்பிட வேண்டும்.
http://news.lankasri.com/astrology/03/126266?ref=lankasritop

No comments:

Post a Comment