தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 5 ஜூன், 2017

முதலாம் குலோத்துங்க சோழனால் கட்டப்பட்ட திருவிடைவாசல் புண்ணியகோடியப்பர் கோயிலின் சிறப்புகள்

தேவாரப்பாடல் பெற்ற தலங்களின் வரிசையில் கடைசியாக சேர்க்கப்பட்டு 275-வது தலமாக திகழும் திருவிடைவாசல் புண்ணிய கோடியப்பர் கோவிலின் சிறப்புகள் பற்றி பார்ப்போம்.
திருவிடைவாசல் புண்ணியகோடியப்பர் கோவிலின் சிறப்புகள் என்ன?
இந்த கோவிலில் வருடத்தில் இரண்டு மாதங்கள் மட்டும் சரியாக இறைவனின் மீது சூரிய ஒளி படுகிறது. இந்த நிகழ்வு வைகாசி மற்றும் மார்கழி மாதங்களில் நடைபெறுகிறது.
இத்தலத்தில் சாஸ்தா குழந்தை வடிவில் பாலசாஸ்தாவாக அருளுகிறார். தட்சிணாமூர்த்தி சிம்மாசன மண்டபத்தில் வீற்றிருக்கிறார்.
கோவிலின் மேற்கே காவிரியின் கிளைநதியான வெண்ணாறு, தெற்கே வெள்ளையாறு, வடக்கே பாண்டையாறு, கிழக்கே கடல் சூழ இத்தலம் அமைந்துள்ளது.
திருஞான சம்பந்தர் காலத்திற்கு முன்பிருந்தே இத்தலம் திருவிடைவாசல் என அழைக்கப்பட்டதால், சம்பந்தர் தனது பாடலில் "விடைவாயே" என குறிப்பிட்டு பாடியிருக்கிறார்.
இந்த தலம் 1000 முதல் 2000 வருடங்களுக்கு பழமையானது என்று பல குறிப்புகளின் மூலம் தெரியவருகிறது.
இக்கோயில் முதலாம் குலோத்துங்க சோழனால் கட்டப்பட்டிருக்கிறது. சோழர்களால் கட்டப்பட்ட கோயில் இது என்பதால் அதிக கட்டடக்கலை முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.
திருமணத் தடை, குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள் இந்த கோயிலுக்கு வந்தால் மிகுந்த பலன் கிடைக்கும் என்கின்றனர். மேலும் தங்கள் வேண்டுதல் நிறைவேற பஞ்சமூர்த்திகளுக்கும் அபிஷேகம் செய்து வழிபடுகின்றனர்.
கோயில் பிரகாரத்தில் விநாயகர், தட்சிணாமூர்த்தி, நர்த்தன விநாயகர், லிங்கோத்பவர், பிரம்மா, துர்க்கை, சண்டிகேஸ்வரர், நந்தி கஜலட்சுமி, வள்ளி தெய்வானையுடன் முருகர், பாலசாஸ்தா, நவகிரகங்கள், பைரவர், அய்யனார், சூரிய சந்திரர்கள் ஆகிய கடவுள்கள் அமைந்துள்ளது.
மேலும் இந்த கோவிலின் அருகில் பூம்புகார், நாகப்பட்டினம், கும்பகோணம், சுவாமிமலை, திருநாகேஸ்வரம், சிதம்பரம், திருவெண்காடு போன்ற சுற்றுலாத்தல ஊர்களும் உள்ளது.
http://news.lankasri.com/travel/03/126496?ref=morenews

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக