தொலைக்காட்சி!!

Search This Blog

Saturday, June 24, 2017

எலுமிச்சை வேகவைத்த நீர்: வெறும் வயிற்றில் குடிப்பதன் அற்புதம்

எலுமிச்சை பழத்தில் மட்டுமல்லாமல், அதன் தோலிலும் ஏராளமான மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளது.
எனவே முழு எலுமிச்சை பழத்தையும் நீரில் வேகவைத்து குடிப்பதால், கிடைக்கும் நன்மைகள் என்னவென்று தெரியுமா?
எலுமிச்சை நீர் தயாரிக்கும் முறை?
ஒரு பாத்திரத்தில் 6 எலுமிச்சை பழங்களை பாதியாக வெட்டி போட்டு, அதில் 1/2 லிட்டர் தண்ணீர் ஊற்ற வேண்டும்.
பின் 3 நிமிடம் அந்த நீரை நன்கு கொதிக்க வைத்து இறக்கி, 10-15 நிமிடங்கள் குளிர வைத்து, அந்நீரை வடிகட்டி கொள்ள வேண்டும்.
அதன் பின் வடிகட்டிய அந்த எலுமிச்சை நீரில், சிறிதளவு தேன் கலந்து குடிக்க வேண்டும்.
நன்மைகள்
எலுமிச்சை பழங்கள் வேகவைத்த நீரை தினசரி காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால், ஏராளமான நன்மைகளை பெறலாம்.
  • உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
  • உடல் சோர்வு நீங்கி, சுறுசுறுப்புத் தன்மை அதிகரிக்கும்.
  • செரிமானம் மற்றும் மெடாபலிசத்தை சீராகும்.
  • நச்சுக்கள் வெளியேற்றப்பட்டு, உடல் முழுவதும் சுத்தமாகும்.
  • கெட்ட கொலஸ்ட்ரால் கரைக்கப்பட்டு, உடல் எடை குறையும்.
http://news.lankasri.com/health/03/127539?ref=right_featured

No comments:

Post a Comment