தொலைக்காட்சி!!

Search This Blog

Friday, June 9, 2017

உங்கள் சுண்டு விரலின் அளவை வைத்தே உங்க ரகசியங்களை பற்றி தெரிந்துக் கொள்ளலாமாம் !!

கைரேகை ஜோதிடத்தில் பல முறையில் ஒருவரது குணாதிசயங்கள் கூறப்படுகின்றன. ஒவ்வொரு நாட்டிலும் இது போன்ற ஒரு ஜோதிட முறை பின்பற்ற படுகிறது. சிலர் இதை அறிவியல் பூர்வமாகவும் நிரூபணம் செய்துள்ளனர். ஒருசிலார் இந்த தொழில்நுட்ப யுகத்தில்
இந்த பொய்யும் புரட்டும் எப்போது அழியும் என காத்திருக்கின்றனர். இது தென்கொரியாவில் பரவலாக காணப்படும் சுண்டு விரல் கொண்டு ஒரு நபரின் குணாதிசயங்கள் , இரகசியங்கள் அறியும் முறை.
குட்டி!
சுண்டுவிரல் தான் இருப்பதிலேயே மிகவும் சிறிய விரல். அதிலும், மோதிர விரலுடன் ஒப்பிடுகையில் மிகவும் சிறிய சுண்டு விரல் இருப்பவர்கள் வெட்கம், கூச்சம் அதிகம் கொள்ளும் நபராக இருப்பார்கள். புதிய நபர்கள் மத்தியில் இது தலைதூக்கி நிற்கும். இவர்கள் பெரிய கனவுகள் கொண்டிருப்பார்கள். ஆனால், கூச்ச மனோபாவத்தால் தாங்கள் அடைய வேண்டிய தூரத்தை / உயரத்தை விட குறைவாகவே அடைவார்கள்.
இயல்பு அளவு!
மோதிர விரலின் முதல் அடுக்கு (கோடுக்கு) இணை அளவு சுண்டு விரல் இருக்கும் நபர்கள் குணாதிசயங்களும் சமநிலையாக இருக்கும். இவர்கள் ஒருவரை பற்றி நன்கு அறிந்த பிறகு அவர்களுடன் நெருங்கி பழகுவார்கள்.
நீளமாக!
மோதிர விரலை முதல் கோடினை காட்டிலும் சுண்டு விரல் நீளமாக கொண்டுள்ளவர்கள். மிக சகஜமாக, சிரித்த முகத்துடன் பழகுவார்கள். அவர்களுக்கு எல்லாவற்றிலும் லக் இருக்காது. கடினமாக உழைக்கும் குணம் கொண்டிருப்பார். இவர்களுடன் நம்பி பழகலாம்.
கீழ் அடுக்கு!
ஆள்காட்டி, பெருவிரல், மோதிர விரலுடன் ஒப்பிடுகையில் சுண்டு விரல் மட்டும்சற்றே கீழ் நிலை கொண்டிருப்பவர்கள்., கனவுலகில் வாழ்பவர்களாக இருப்பார்கள். தங்கள் கனவுகளை நிஜமாக்க சிரமப்படுவார்கள்.
சமம்!
மோதிர விரல், சுண்டு விரல் ஒரே அளவில் கொண்டிருப்பவர்கள் மிகவும் அரிதானவர்கள். இவர்கள் தனித்தன்மை கொண்டிருப்பார்கள். அதிக பலமும், ஆளுமை சக்தியும் கொண்டு திகழ்வார்கள்.
சதுரம்!
சுண்டு விரல் மேடு சதுரமாக கொண்டிருபப்வர்கள் ரோல்மாடலாக திகழ்வார்கள், எதையும் நேரடியாக பேசுபவர்களாக இருப்பார்கள். ஒளிவுமறைவு இல்லாமல் பழகுவார்கள்.
முக்கோணம்!
சுண்டுவிரல் மேடு முக்கோணம் போல கொண்டிருப்பவர்கள் சிறந்த எழுத்தாளராக திகழ்வார்கள். மக்கள் மத்தியில் ஈர்ப்புடன் பேசுவார்கள். ஒரு கூட்டத்தில் தனித்து சிறப்பு குணத்தோடு காணப்படுவார்கள்.
வளைவு!
சுண்டு விரல் மேடு வளைந்து காணப்படுபவர்கள் சற்றே அச்ச உணர்வு அதிகம் கொண்டிருப்பார்கள். அமைதியாக இருந்துவிட்டு போகலாம் என எண்ணுவார்கள். எதுவாக இருந்தாலும் டீல் பேசி முடிவெடுப்பார்கள்.
- See more at: http://www.manithan.com/news/20170608127571?ref=rightsidebar-tamilwin#sthash.z81xyZ3V.dpuf

No comments:

Post a Comment