தொலைக்காட்சி!!

Search This Blog

Thursday, June 29, 2017

ஒரு எழுத்தில் மாறும் அர்த்தம்....

தமிழ் மொழியானது பழமையான தொன்மையான மொழி ஆகும். இதன் இலக்கணம் மற்றும் இலக்கியங்கள் மனிதர் எப்படி வாழ வேண்டும் என்பதில் இருந்து, ஒரு செயலை எப்படி செய்ய வேண்டும், செய்ய கூடாது எனவும் கற்பித்துள்ளது.
தமிழ் மொழியில் மயங்கொலி சொற்கள் மற்றும் ஒரு எழுத்தில் பொருள் தரும் எழுத்துகள் என அற்புத தன்மைகளை நாம் காண முடியும். அதில் வி எனும் எழுத்து முற்சேர்க்கையாக வரும் போது ஒரு வார்த்தையின் பொருளை எப்படி சிறப்பாக மாற்றுகிறது என்பது குறித்து இங்கு காணலாம்…
வி - நாயகன்
நாயகன் – ஒரு கதையில் தலைமை வகிப்பவன்!
விநாயகன் - முதற்முதல் கடவுள்!.
வி - தரணி 
தரணி - உலகத்தை குறிக்கும் சொல்.
விதரணி – வள்ளல், கொடையுள்ளம் கொண்டுள்ளதை குறிக்கும் சொல் ; (விதரண் என்பதன் பெண்பால் சொல்)
வி - லட்சணம்
லட்சணம் – அழகை குறிக்கும் சொல்.
விலட்சணம் – சிறப்பு இயல்பை குறிக்கும் சொல்.
வி- குணம்
குணம் – ஒரு மனிதனின் செயலை குறிப்பது.
விகுணம் – தவறான குணம் கொண்டவர்களை குறிப்பது.
வி - பூதி
பூதி – சாம்பல்!
விபூதி – கோவிலில் பிரசாதமாக வழங்கப்படும் / வெற்றில் இட்டுக் கொள்ளும் பொருள்.
வி - வேகம்
வேகம் – ஓட்டத்தின் அளவை குறிக்கிறது.
விவேகம் – அறிவு, புத்திசாலித்தனத்தின் அளவை குறிக்கிறது
வி - வாதம்! 

வாதம் - பேசுதல்! 

விவாதம் - ஒரு கரு கொண்டு சிறப்பாக பேசுதல்.

http://www.manithan.com/news/20170629128020

No comments:

Post a Comment