தொலைக்காட்சி!!

Search This Blog

Monday, June 19, 2017

பெண்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய விடயங்கள்!

பெண்கள் தினமும் அதிகாலை 5 மணிக்கு விழிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டு சூரியன் உதிக்கும் முன்பே சமையல் மற்றும் வீட்டு வேலைகளை முடித்து விடுவது மிகவும் நல்லது.
பெண்கள் எப்போதும் பொருத்தமான உள்ளாடைகள் அணிவது மிகவும் அவசியம். இறுக்கமான உள்ளாடைகளை அணியக் கூடாது. ஏனெனில் அது பல்வேறு உடல் ரீதியான பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
புதிதாக தொழில் தொடங்குவதில் பெண்களுக்கு அதிக ஆர்வம் இருந்தால், அதற்கு அவர்கள் முக்கியமாக தொழில் நேர்த்தியை கற்றுக் கொள்வதுடன், நட்பான அணுகுமுறை அவர்கள் முன்னேற்றத்தின் படிக்கல் என்பதை புரிந்துக் கொள்ள வேண்டும்.
பெண்களில் சிலர் ஹோட்டலில் சுவை நன்றாக உள்ளது என்று அடிக்கடி ஹோட்டலில் சாப்பிடுவது தவறு. அதற்கு பதிலாக சமையல் குறிப்புகளை படித்து, அதன் படி, வீட்டிலே ஆரோக்கியமாகவும், சுவையாகவும் சமைக்க கற்றுக் கொள்ள வேண்டும்.
வீட்டில் உள்ள பொருள்கள் சிதறிக் கிடந்தால், அதற்கு டென்ஷன் அடையாமல், இனிமையான இசையை கேட்டுக் கொண்டு சிதறிக் கிடக்கும் பொருள்களை ஒழுங்குபடுத்துவதில் ஈடுபட கற்றுக் கொள்ள வேண்டும்.
தினமும் வீட்டை பெருக்கும் போது, அந்த குப்பைகளை ஒரு தொட்டியில் போட்டு சேகரித்த பின் வெளியில் போடும் நல்ல பழக்கத்தையும் கற்றுக் கொள்ள வேண்டும்.
பெண்கள் வீட்டில் தனியாக இருக்கும் போது, திருடர்கள் தாக்கும் நேர்ந்தால், அதை சமாளிக்க காரத்தே போன்ற தற்பாதுகாப்பு கலைகளை தெரிந்து வைத்திருக்க வேண்டும்.
பெண்கள் பணத்தை சம்பாதிப்பதை விட, அதை சேமிப்பதில் அதிக அக்கறை கொள்ள வேண்டும். தொழில் மற்றும் படிப்பிற்காக வெளிநாடுகளுக்கு செல்ல நேரிட்டால், மன ரீதியான தைரியத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
- See more at: http://www.asrilanka.com/2017/06/18/47899#sthash.nAfLHyCq.dpuf

No comments:

Post a Comment