தொலைக்காட்சி!!

Search This Blog

Tuesday, June 13, 2017

எது வெற்றி !?



 *4 வயதில்*, தனியாக நடக்க முடிந்தால், அது வெற்றி !

 *8 வயதில்*, தனியாக வெளியே சென்று வழி தவறாமல் வீடு திரும்பினால், அது வெற்றி !

 *12 வயதில்*, நல்ல நண்பர்கள் கிடைத்தால், அது வெற்றி !

 *18 வயதில்*, வாகன ஓட்டுனர் உரிமம் பெற்றால், அது வெற்றி !

 *22 வயதில்*, பட்டதாரியாக பல்கலைக்கழகத்திலிருந்து வெளியேறினால், அது வெற்றி !

 *25 வயதில்*, நல்ல வேலை கிடைத்தால், அது வெற்றி !

 *30 வயதில்*, தனக்கென குடும்பத்தை அமைத்துக்கொள்ள முடியுமானால், அது வெற்றி !

 *35 வயதில்*, போதுமான அளவு சம்பாரிக்க முடியுமானால், அது வெற்றி !

 *45 வயதில்*, இளைஞரைப் போன்ற உருவத்தை தங்கவைக்க முடியுமானால், அது வெற்றி !

 *50 வயதில்*, தன் பிள்ளைகளுக்கு நல்ல கல்வியை அளிக்க முடியுமானால், அது வெற்றி !

 *55 வயதில்*, நம் கடமைகளை தொடர்ந்து சரியாக செய்ய முடியுமானால், அது வெற்றி !

 *60 வயதில்*, ஓய்வு பெற வேண்டியவர் என நிராகரிக்கப்படாமல் செயலாற்ற முடியுமானால், அது வெற்றி !

 *65 வயதில்*, நோயில்லாமல் வாழ முடியுமானால், அது வெற்றி !

 *70 வயதில்*, மற்றவர்களுக்கு பாரமில்லாமல் வாழ முடியுமானால், அது வெற்றி !

 *75 வயதில்*, பழைய நண்பர்களுடன் உறவாடி மகிழ முடியுமானால், அது வெற்றி !

 *80 வயதிற்கு மேல்* மற்றவர் துணையில்லாமல் வெளியே சென்று வழி தவறாமல் வீடு திரும்ப முடியுமானால், அது வெற்றி !

*Be defeated to become victoriuos.*

தோற்று போனால்
வெற்றி கிடைக்குமா ?

 *அம்மாவிடம் தோற்று போ, அன்பு அதிகரிக்கும்..*

 *அப்பாவிடம் தோற்று போ, அறிவு மேம்படும்..*

 *துணையிடம் தோற்று போ, மகிழ்ச்சி இரட்டிப்பாகும்..*

 *பிள்ளையிடம் தோற்று போ, பாசம் பன்மடங்காகும்..*

 *சொந்தங்களிடம் தோற்று போ, உறவு பலப்படும்..*

 *நண்பனிடம் தோற்று போ, நட்பு உறுதிப்படும்..*

 *ஆகவே தோற்று போ,*

தோற்று போனால் வெற்றி கிடைக்கும்

🙏 அன்புடன் வாழுங்கள்.மற்றவரை அன்புடன் வாழ வழி வகுப்போம்..

......படித்ததில் பிடித்தது!


Mangalavanithai Nadarajah

No comments:

Post a Comment