தொலைக்காட்சி!!

Search This Blog

Sunday, June 25, 2017

அதிர்ஷ்ட மழை பொழிய.. தூங்கும் முன் இதை செய்யுங்கள்

இரவில் தூங்கும் நேரத்திற்கு முன் ஒருசில செயல்களை பின்பற்றி வந்தால், நமது வாழ்வில் அதிர்ஷ்டத்தை வரவழைக்கலாம் என்று சாஸ்திரங்கள் கூறுகிறது.
உறங்கும் முன் செய்ய வேண்டியவை என்ன?
  • உறங்கும் முன் தலையணைக்கு அடியில் சோம்பு நிரப்பிய ஒரு சிறிய பையை வைத்துக் கொள்ள வேண்டும். இதனால் இரவில் கெட்ட கனவுகள் வராது.
  • ஒரு வெண்கல சொம்பில் நீரை நிரப்பி, அதை தலைக்கு பக்கவாட்டில் வைத்துக் கொண்டு தூங்க வேண்டும். மறுநாள் காலையில் அந்நீரை செடிகளுக்கு ஊற்றினால், அதிர்ஷ்டம் அதிகரிக்கும்.
  • இரவில் உறங்கும் முன் நல்ல புத்தகத்தைப் படித்து விட்டு, தென் திசையில் தலையை வைத்துக் கொண்டு தூங்க வேண்டும். இதனால் நல்ல ஆழ்ந்த உறக்கம் ஏற்படும்.
  • இரவு நேரத்தில் உறங்கும் முன் 10 நிமிடம் தினமும் தியானம் செய்தால், மனதை ஒருமுகப்படுத்தும் திறன் மற்றும் மூளையின் ஆற்றல் அதிகரிக்கும்.
  • பாதங்களை வெதுவெதுப்பான நீரால் கழுவி விட்டு, கற்பூரத்தை பொடி செய்து தேங்காய் எண்ணெயுடன் கலந்து, குதிகாலில் தடவிக் கொண்டு உறங்க வேண்டும்.
  • உறங்கும் முன் குறைந்தது 15 நிமிடம் நடைப்பயிற்சி செய்து, சிறிது நேரம் தியான நிலையில் அமர்ந்து விஷ்ணு மந்திரத்தை சொல்ல வேண்டும்.

http://news.lankasri.com/lifestyle/03/127641?ref=right_featured

No comments:

Post a Comment