தொலைக்காட்சி!!

Search This Blog

Tuesday, June 27, 2017

இன்றும் லட்சக்கணக்கான தமிழர்கள் வாழ்ந்து வரும் ஓர் அதிசய தீவு!

தமிழர்கள் இந்தியா மற்றும் உலகின் பல்வேறு இடங்களில் வாழ்ந்து வருகிறார்கள் என்று அனைவரும் அறிந்ததே. அதுமட்டுமல்லாமல் அங்கே வாழும் தமிழர்கள் தமிழ் கலாச்சாரங்களுடனும் தமிழ் மொழியை பின்பற்றியும் வாழ்ந்து வருகிறார்களா? அவ்வாறு வாழ்வதற்கான சூழல் இருக்கிறதா என்பது கேள்வி குறியே.
ஆனால், நம்மில் பலரும் அறியாத ஓர் அழகிய தீவில் தமிழர்கள் குடும்பம் குடும்பமாக வாழ்ந்து வருகின்றனர். கிழக்கு ஆப்ரிக்கா பகுதியில் மொரிசியஸ் அருகே ரியூனியன் என்ற தீவு அமைந்திருக்கிறது இங்கே தான் தமிழர்கள் இன்றளவில் லட்சக்கணக்கில் குடும்பம், குடும்பமாக வாழ்ந்து வருகின்றனர்
ரியூனியன் தீவுவின் பரப்பளவு
இந்த ரியூனியன் தீவு கிழக்கு ஆப்ரிக்காவில் மொரிசியஸ் அருகே அமைந்திருக்கிறது. இதன் மொத்த பரப்பளவே 2500 கி.மீ சதுர தூரம் தான். 2012-ன் மக்கள் தொகை கணக்களவு படி இந்த தீவில் ஏறத்தாழ 8.4 லட்சம் பேர் வாழ்ந்து வருகின்றனர். இவர்களில் 2 லட்சம் பேர் தமிழர்கள் என கூறப்படுகிறது.
இந்த தீவு பிரான்ஸ் அரசின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வருகிறது. இங்கே மக்கள் மிகவும் மகிழ்ச்சியுடனும், சுதந்திரமாகவும் வாழ்ந்து வருகின்றனர். ஆனால், பல ஆண்டுகளுக்கு முன்னர் அப்படி ஓர் நிலை இருக்கவில்லை.
180 ஆண்டுகளுக்கு முன்பு..
180 ஆண்டுகளுக்கு முன், பாண்டிச்சேரி பிரெஞ்சு நாட்டுக்கு கீழே அடிமையாக இருந்து வந்தது. அப்போது பாண்டிச்சேரியில் இருந்தும், மற்ற தமிழக பகுதிகளில் இருந்தும் ஏஜெண்டுகள் மூலம் பலர் இந்த ரியூனியன் தீவிற்கு கரும்பு தோட்டங்களில் பணிபுரிய அழைத்து செல்லப்பட்டனர்.
அடிமை வேலை!
ஆரம்பக் காலக்கட்டத்தில் பிரெஞ்சு அரசின் கீழே இங்கிருந்து சென்ற தமிழர்கள் அடிமை போல தான் நடத்தப்பட்டனர். பிறகு ஆண்டுகள் கழிய, பிரான்ஸ் நாட்டு குடியுரிமை தமிழர்களுக்கு கிடைத்து கவுரமவாக பார்க்கப்பட்டனர். பின்னர் மெல்ல, மெல்ல, இங்கிருந்த தமிழர்களின் நிலை உயர ஆரம்பித்தது.
தமிழ் கலாச்சாரம்!
இங்கு வாழும் மக்கள் பிரான்ஸ் மற்றும் தமிழ் கலாச்சார கலவையுடன் தான் வாழ்ந்து வருகின்றனர். கொஞ்சம், கொஞ்சமாக தமிழர்கள் மக்கள் தொகை குறைந்து வந்தாலும், தங்களால் முடிந்த வரை, தமிழ் கலாச்சாரத்தை காப்பாற்றி, பின்பற்றி வருகிறார்கள் ரியூனியன் தீவை சேர்ந்த தமிழர்கள். 
இன்றளவும் இங்கு வாழ்ந்து வரும் தமிழர்கள் தைப்பூசம், பொங்கல் போன்ற பண்டிகைகளை கொண்டாடி தான் வருகின்றனர். மேலும், இவர்கள் கரகம், காவடி ஆட்டங்கள் போன்ற கலைகளையும் அழியாமல் பாதுகாத்து வருகின்றனர்.
எரிமலை மற்றும் அடர்த்தியான காடுகள்!
இந்த ரியூனியன் தீவில் இரண்டு எரிமலைகளும் இருக்கின்றன. அவற்றுள் ஒன்று 3200மீட்டர் உயரமும், மற்றொன்று 2600 மீட்டர் உயரமும் கொண்டிருக்கின்றன. இந்த எரிமலைகள் இதுவரை நூறு முறைகளுக்கும் மேல் எரிக் குழம்பை கக்கியிருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
ரியூனியன் தீவில் அடர்த்தியான காடுகளும் காணப்படுகின்றன.இங்கே தண்ணீர் பஞ்சமே இல்லை. இங்கே மழை எல்லா வருடமும் தவறாமல் பெருமளவு பெய்கிறது.
http://www.manithan.com/news/20170627127980

No comments:

Post a Comment