தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 5 ஜூன், 2017

சளியை உடனே அகற்ற சிறந்த ஆலோசனைகள்!

உடலில் இருக்கும் சளியை முற்றிலும் நீக்க உதவும் அருமையான வீட்டு வைத்தியங்கள் இதோ..
மருத்துவம்- 1
சுக்கு, மிளகு, திப்பிலி, தாளிசபத்திரி, தேவதாரு ஆகியவை சேர்த்து நன்கு பொடி செய்து, அதனுடன் 1 லிட்டர் தண்ணீர் சேர்த்து 1/8 லிட்டராக காய்ச்சி காலை, மாலை என்று இரண்டு வேளைகள் குடித்து வந்தால் சளி, காய்ச்சல் குறையும்.
மருத்துவம்- 2
நன்கு நீர் விட்டு சுத்தம் செய்த கொள்ளை வேகவைத்து எடுத்து வடிக்கட்டி, அதில் ரசம் வைத்து சாப்பிட்டு வந்தால் சளி குறையும்.
மருத்துவம்- 3
வெள்ளை சர்க்கரை சேர்க்காத கடுங்காப்பியை காலையில் குடித்து வந்தால், சளி உடனே நீங்கும்.
மருத்துவம்- 4
தூய யூகலிப்டஸ் எண்ணெயை தொண்டை மற்றும் மார்பில் நன்கு தடவி வந்தால் சளி, இருமல், நெஞ்சு எரிச்சல் மற்றும் மூச்சு திணறல் போன்ற பிரச்சனைகள் குறையும்.
மருத்துவம்- 5
மாதுளம் பழத்தை நன்கு கழுவி அதை தினமும் சாப்பிட்டு வந்தால், சளி தொல்லைகள் குறையும்.
மருத்துவம்- 6


துளசி, கற்பூரவல்லி இலை ஆகிய இரண்டையும் சம அளவு எடுத்து வேக வைத்து, அதன் சாற்றைப் பிழிந்து ஒரு வேளைக்கு 10 மி.லி வீதம் என்று 3 நாட்கள் குடித்து வந்தால், சளி குறையும்.
http://news.lankasri.com/medical/03/126431?ref=right_featured

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக