தொலைக்காட்சி!!

Search This Blog

Monday, June 5, 2017

ஆண்களின் கவர்ச்சி எது தெரியுமா?

பெண்களுக்கு எது பிடிக்கும் என தெரிந்து அவர்களை ஈர்ப்பதை விட, பெண்கள் ஆண்களிடம் என்ன விரும்புவார்கள், ஆண்களிடம் எதை கவர்ச்சியாக நினைக்கிறார்கள் என்பதை அறிந்து முயற்சிப்பதே சிறந்தது.
ஆண்களிடம் கவர்ச்சியாக கருதும் விடயங்கள் என்ன?
 • வீட்டில் யாரும் இல்லாத போது, விருந்தினர், நண்பர்கள், காதலி உற்றார் வந்திருக்கும் போது சுவையாக சமைத்து அசத்துவது.
 • வெட்கப்படாமல் சில்லித்தனமான கொமெடிகள் செய்வதுடன், வெகுளியாக நடந்துக் கொள்வது.
 • பொருளாதார ரீதியாக தன்னை நிலைப்படுத்தி கொள்வது. ஆனால் தலைக்கனம் ஏறாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
 • செல்லப் பிராணிகளை வளர்ப்பது. அதன் மீது அதிக அன்பு செலுத்தி, அக்கரையுடன் பார்த்துக் கொள்வது.
 • தன்னை தானே கேலி செய்து சிரித்து கொள்ளும் போது, சங்கடப்படாமல் இருப்பது.
 • பெண்களின் கூந்தலுக்கு மட்டுமல்ல, ஒவ்வொரு நபருக்கும் ஒரு தனி நறுமணம் இருக்கிறது. அப்படி, உங்களுக்கான நறுமணத்தை தனித்துவமாக மற்றவர்கள் உணருவது போல பராமரிப்பது.
 • வீடு சுத்தம் செய்வது, பாத்திரங்கள், உடைகள் கழுவவும், உணவு சமைக்கவும் உதவி செய்வது.
 • ஒரு இசை கருவி ஏதேனும் ஒன்றை வாசிக்க கற்றுக் கொள்வது. கற்பனை திறன் மிக்க புத்தகங்களை படிப்பது.
 • புதிய நபராக தன்னை விட சிறிய, எளிய நபர்களாக இருந்தாலும், அவர்களிடம் கனிவாக நடந்துக் கொண்டு பழகுவது.
 • தனக்கு பிடித்த செயல்களை மறக்காமல், சரியான இடைவேளையில் செய்து கொண்டே இருப்பது. அது கிரிக்கெட், பாடல்கள் எழுதுவது, பயணம் மேற்கொள்வது போன்ற எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்.
 • ஜிம்மிற்கு சென்று, அப்படியே வியர்வையுடன் வீட்டிற்கு வந்து தனது கட்டுமஸ்தாக உடம்புடன் காட்சியளிப்பது.
 • குழந்தைகளிடம் அன்பாக பழகுதல், அவர்களுடன் சேர்ந்து சுட்டி சேட்டைகளில் ஈடுபடுதல்.
http://news.lankasri.com/relationship/03/126441?ref=right_featured

No comments:

Post a Comment