தொலைக்காட்சி!!

Search This Blog

Friday, June 2, 2017

தொலைக்காட்சி, சினிமா போன்றவை மூலமாக மனிதரை கட்டுப்படுத்தி உருவாக்கப்படும் புது உலகம்?

காட்சிகள் மூலம் ஒரு மனிதனை கட்டுப்படுத்தி ஆள முடியும் எனவும், அதன் அடிப்படையிலேயே இந்த உலக மனிதர்கள் இயக்கப்படுகின்றார்கள் என்பதனை ஆய்வாளர்கள் கண்டு பிடித்துள்ளார்கள்.
மேலும் புது உலகத்தை உருவாக்கவும், அனைத்து மனிதர்களையும் கட்டுப்படுத்தவும், இந்த அபாயகரமான சதித் திட்டம் தற்போதும் மறைமுகமாக நடைமுறையில் உள்ளதாகவும் கூறப்படுகின்றது.
அந்தவகையில் தொலைக்காட்சி, சினிமா போன்றவை மூலமாகவே மனிதர்கள் கட்டுப்படுத்தப்படுகின்றார்கள். மின்காந்த அலைகள் மூலமாக இவை சாத்தியம் என்பதும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
அதாவது காட்சிகள் எனப்படும் மின்காந்த அலைகள் மூலமாக மனிதரது நரம்பு மண்டலத்தினை கட்டுப்படுத்தி, அதன் மூலமாக அவனது எண்ணத்தை மாற்றியமைக்க முடியும் எனவும் விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.
இந்த கண்டுபிடிப்பு ஒரு வகையில் மிகவும் அபாயகரமானதாக கருதப்படுகின்றது. மனித மூளைகள் கட்டுப்படுத்தல் செயற்பாடு இரண்டாம் உலக யுத்தத்தின் பின்னர் தொடக்கம் செயற்படுத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஆனாலும் எவரும் இதனை விஞ்ஞான பூர்வமாக நிரூபிக்காத காரணத்தினால் அதிகமானோர் நம்பிக்கை கொள்ளவில்லை. ஆனால் தற்போது நீண்ட கால ஆய்வின் பின்னர் இது உண்மை என விஞ்ஞானிகள் ஆணித்தரமாக நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.
அத்தோடு இந்தக் கண்டுபிடிப்புக்கு காப்புரிமையும் கொடுக்கப்பட்டுள்ளது. US6506148 இது அதன் காப்புறுதி இலக்கமாகும்.
Nervous system manipulation by electromagnetic fields from monitors என்பதே அந்தக் கண்டுபிடிப்பு. https://www.google.com/patents/US6506148 இந்த தளத்தில் இது குறித்து அறிந்து கொள்ள முடியுமானதாக இருக்கும்.
காட்சிகள் வடிவமைப்பு ஊடாக மனிதர்களின் உணர்ச்சிகளை தூண்டவும், அவர்களது எண்ணங்களை மாற்றியமைக்கவும் முடியும் என்பதே இந்தக் கண்டுப்பிடிப்பு.
இதேவேளை இந்த கண்டுபிடிப்பானது தற்போது மறைமுகமாக செயல்படுத்தப்பட்டு வருவதாகவும் ஆய்வாளர்கள் அதிர்ச்சி மிக்க தகவல்களை வெளியிட்டு வருகின்றனர்.
உதாரணமாக சிறுவர்கள் விரும்பும் கார்ட்டூன் படங்கள்
ஒரு காலத்தில் கார்ட்டூன்கள் என்பன வண்ணமயமிக்கதாகவும், அறிவுசார் வளர்ச்சியை ஏற்படுத்துவதாகவும், நகைச்சுவை மற்றும் மகிழ்வினை ஏற்படுத்துவதாகவுமே உருவாக்கப்பட்டன.
ஆயினும் தற்போது கொடூர எண்ணங்களை சிறுவர்கள் மனதில் விதைப்பதாக, அவனை விடவும் ஒருவன் இல்லை என்ற எண்ணத்தை உருவாக்குவதாகவுமே (அதிகமாக) அமைக்கப்படுகின்றன.
ஒருவன் குழந்தையாக இருக்கும் போதே அவன் மனதில் அழிப்பு எனும் கொடூர எண்ணம் உருவாக்கப்பட்டுக்கொண்டு வருகின்றது. இவை காலப்போக்கில் சிந்திக்கும் திறனற்ற மனிதர்களை உருவாக்கும் திட்டம் எனவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்தத்திட்டம் “ஓர் உலகக்கோட்பாடு” என்ற மர்மக் குழு ஒன்றின் மூலமாக செயற்படுத்தப்பட்டுக் கொண்டு வருவதாகவும் ஆய்வுமட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. (ஆனால் உத்தியோக பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை.)
அந்தவகையில் மேற்குறிப்பிடப்பட்ட (N.s.m.e..m) தொழில் நுட்பம் வெளிப்படையாக, நேரடியாக நடைமுறைப்படுத்தப்பட்டால் உலகம் கட்டுப்பாடற்ற வகையில் இயங்கத் தொடங்கும் என்பது ஆய்வாளர்களின் தகவல்.
ஆரம்ப காலம் முதலாகவே இந்த மனித மூளைச்சலவைப் பற்றி செய்திகள் வெளிவந்தன. 1950 களில் CIA மற்றும், அமெரிக்க பாதுகாப்புத்துறை Project MKUltra எனும் ஓர் திட்டத்தில் ஈடுபட்டு வந்ததாகவும் கூறப்படுகின்றது. இது மூளையைக் கட்டுப்படுத்தும் செயற்திட்டமாகும்.
அதன் பின்னர் இதுவோர் சதிக் கோட்பாடு எனக் கூறப்பட்டு வந்த நிலையிலேயே இந்தக் கண்டுபிடிப்பு உண்மை எனவும் அது, பயன்பாட்டில் உள்ளதாகவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
எவ்வாறாயினும் இந்தக் கண்டுபிடிப்பு மூலம் மனித மூளையை வேறு ஓர் இடத்தில் இருந்து ஹேக் செய்ய (ஊடுருவ) முடியும் என்பதே உண்மை. இந்த சதி மறைமுகமாக தற்போது உலகில் நடைபெற்றுக் கொண்டு வருகின்றது எனவும் கூறப்பட்டுள்ளது.
இது குறித்து பல ஆய்வுக்கட்டுரைகளும், செய்திகளும் வெளிவந்தபோதும் உயர்மட்ட அதிகாரங்கள் இதனை மறைத்து வருவதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
இந்த ஆபத்து மிக்க கண்டுபிடிப்பு நேரடியாக பிரயோகிக்கப்பட்டால் உலகம் பாரிய அழிவைச் சந்திக்க நேரிடும் என்பதே இதன் உண்மைத் தன்மை எனவும் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

No comments:

Post a Comment