தொலைக்காட்சி!!

Search This Blog

Friday, June 23, 2017

கண்கள் துடித்தால் என்ன அர்த்தம் என்று தெரியுமா?

வலது கண் துடித்தால் கெட்டது என்றும், இடது கண் துடித்தால் நல்லது என்றும் நம் மக்களைடையே பல கருத்துக்கள் பரவி வருகின்றது.
ஆனால் கண்கள் துடிப்பது நல்லது என்று சொல்ல முடியாது. ஏனெனில் கண்கள் துடிப்பதற்கு உடலின் ஆரோக்கியமின்மை குறைபாடுகளின் அறிகுறியாகக் கூட இருக்கலாம்.
கண்கள் துடிப்பது ஏன்?
உடம்பில் உள்ள புறநரம்புகளின் இயல்புக்கு மீறிய மிகையான தூண்டலின் காரணமாக சில நேரங்களில் கண்களின் நரம்புகளும், அதனைச் சார்ந்த தசைகளும் துடிக்கும். இந்த கண்கள் துடிப்பிற்கு மயோகீமியா என்று மருத்துவ துறையில் கூறுவார்கள்.
குடிப்பழக்கம்,சோர்வு, கண்கள் வறட்சி, மன அழுத்தம், அதிக காபி குடிப்பது, சரிவிகித சத்துக்களின் பற்றாக்குறை, அலர்ஜி, அதிக நேரம் புத்தகம் படிப்பது போன்ற செயல்பாடுகள் கண்களின் ஆரோக்கியத்தைக் குறைத்து கண் துடிப்புகளை ஏற்படுத்துகிறது.
ஆனால் நீண்ட நாள் கண் துடிப்பு அல்லது வெட்டி இழுப்பது போன்ற பிரச்சனைகள் இருந்தால், அது மூளை தொடர்பான கோளாறாகவும் இருக்கலாம்.
கண் துடிப்பை தடுப்பது எப்படி?
கண் துடிப்பினை தடுக்க, நன்றாக உறங்குவதுடன், கண்களுக்கு போதிய ஓய்வினைக் கொடுக்க வேண்டும். அல்லது கண்களுக்கு வெதுவெதுப்பான ஒத்தடம் கொடுத்தால், கண் நரம்புகளின் இறுக்கம் தளர்ந்து கண் துடிப்பது நிற்கும்.
கண்கள் துடிப்பதன் பலன்கள் என்ன?
  • வலது புருவம் - பணவரவு உண்டாகும்.
  • இடது புருவம் - குழந்தை பிறப்பு, கவலைகள் உண்டாகும்.
  • புருவத்தின் இடையில் - பிரியமானவருடன் இருத்தல்.
  • கண் நடுபாகம் - மனைவியை பிரிந்திருத்தல்.
  • வலது கண் துடித்தால் - நினைத்தது நடக்கும்.
  • இடது கண் துடித்தால் - மனைவியின் பிரிவு, கவலைகள் ஏற்படும்.
  • வலதுகண் இமை - மகிழ்ச்சியான செய்தி வரும்.
  • இடது கண் இமை - கவலைகள் உண்டாகும்.
  • வலது கண் கீழ் பாகம் - பழி சுமக்க நேரிடும்.
  • இடது கண் கீழ் பாகம் - செலவுகள் ஏற்படும்.
http://news.lankasri.com/living/03/127530?ref=lankasritop

No comments:

Post a Comment