தொலைக்காட்சி!!

Search This Blog

Sunday, June 18, 2017

உங்கள் இரத்த வகை உங்களைப் பற்றி என்ன சொல்கிறது என்று தெரியுமா?

உங்கள் இரத்த வகைகளைக் கொண்டே உங்களின் குணாதிசயம், சுபாவம், ஆரோக்கியம், நீங்கள் எதில் வலிமையானவர் என்பதையெல்லாம் தெரிந்து கொள்ளலாம் என்பது தெரியுமா? சமீபத்தில் ஜப்பானில் இரத்த வகை மற்றும் ஒருவரின் குணாதிசயம் குறித்து ஆய்வு ஒன்று மேற்கொள்ளப்பட்டது. அதில் இவை இரண்டிற்கும் தொடர்புள்ளது தெரிய வந்துள்ளது. அதுவும் ஒருவரின் குணத்தை அவரது இரத்த வகையைக் கொண்டே கூற முடியுமாம்.
அதனால் தான் ஜப்பானில் உள்ள ஜோதிடர்கள் ராசியைக் கேட்பதற்கு பதிலாக, அவர்களது இரத்த வகையை கேட்கிறார்களாம். மேலும் கொரியா மற்றும் சில கிழக்கு ஆசிய நாடுகளிலும், இரத்த வகையைக் கொண்டே ஒருவரைப் பற்றி கூறுவதாக கருதப்படுகிறது.
இரத்த வகைகளில் ஏ, பி, ஏபி மற்றும் ஓ உள்ளன. இங்கு நாம் பார்க்கப் போவது ஒவ்வொரு இரத்த வகையினரின் காதல் வாழ்க்கை, பணி வாழ்க்கை, சமூக வாழ்க்கை போன்றவற்றைத் தான். சரி, இப்போது அவற்றைக் காண்போமா!

இரத்த வகை ஏ
இந்த வகையினர் மிகுந்த சகிப்புத்தன்மை மற்றும் தங்களது உணர்வுகளை மறைப்பவர்கள். இவர்கள் எதிலும் மற்றும் எதையும் கச்சிதமாக இருப்பார்கள். மேலும் இந்த வகையைச் சேர்ந்தவர்கள் நல்ல பொறுப்பானவர்கள், படைப்பாற்றல் கொண்டவர்கள், நல்ல மரியாதையானவர். இவர்களது நெகட்டிவ் என்றால் மிகவும் சென்சிடிவ், கூச்ச சுபாவம்.

சமூக வாழ்க்கை
இவர்களுக்கு வாக்குவாதத்தில் ஈடுபடுவது பிடிக்காது. நம்பிக்கையானவர்கள், கருணை உள்ளம் கொண்டவர்கள், எளிதில் புண்படக்கூடியவர்கள். அதுமட்டுமின்றி, இவர்களை புண்படுத்தினால் மிகுந்த கோபத்தைக் கொண்டு, நட்புறவையே முறித்துவிடுவார்கள்.

பணி வாழ்க்கை
இந்த வகை இரத்த பிரிவினர் பணியில் மிகுந்த நம்பகமானவர்கள். இவர்கள் தங்களுக்கு கொடுக்கும் வேலையை கச்சிதமாகவும், சிறப்பாகவும் செய்து முடிப்பார்கள். மேலும் வேலைப்பளுவினால் எளிதில் மன அழுத்தத்திற்கு உள்ளாவார்கள்.

காதல் வாழ்க்கை
இந்த வகை மக்கள் மிகுந்த கூச்ச சுபாவம் கொண்டவராதலால், மற்றவர்களுடன் எளிதில் உறவில் ஈடுபடவோ, மனம் திறந்து பேசவோ மாட்டார்கள். இவர்கள் எதையும் பலமுறை யோசிப்பதால், தங்களுக்கு வரும் துணையை கவனமாக தேர்ந்தெடுப்பார்கள். இவர்களைக் காதலிப்பவர்கள் மிகவும் பொறுமையுடன் இருந்து, இவர்கள் மீது அன்பையும், காதலையும் வெளிப்படுத்தினால், இவர்களை கவர்ந்து, தன் வசப்படுத்திக் கொள்ளலாம்.

இரத்த வகை பி
இந்த வகை இரத்த பிரிவினர் மிகவும் ஜாலி டைப், கற்பனை வளமிக்கவர்கள், மிகவும் சுறுசுறுப்புடன் இருப்பார்கள், உணர்வுபூர்வமாக வலிமையானவர்கள். அதே சமயம் இவர்கள் எழுச்சியாளர்கள், சுயநலமிக்கவர்கள், பிடிவாத குணமுள்ளவர்கள், பழி வாங்கும் குணம் கொண்டவர்கள், பொறுப்பற்றவர்கள்.

சமூக வாழ்க்கை
இவர்கள் தன் நண்பர்களை மிகவும் நேசிப்பார்கள். சில சமயங்களில் இவர்களை சமாளிப்பது சிரமமாக இருக்கும். தான் ஒன்றை செய்ய நினைக்கும் போது மற்றவர்கள் சொல்வதை செவி கொடுத்து கேட்கமாட்டார்கள்.

பணி வாழ்க்கை
இந்த வகையினருக்கு விதிமுறைகளைப் பின்பற்ற பிடிக்காது. மற்றவர்களுடன் எளிதில் ஒத்துழைக்கமாட்டார்கள்., பணி கூட. ஆனால் என்ன இருந்தாலும், பணியில் அவர்களது இலக்கு வெற்றியடைவதை நோக்கி இருப்பதோடு, எப்போதும் உயர்ந்த நோக்கங்களையே கொண்டிருப்பார்கள்.

காதல் வாழ்க்கை
பி இரத்த வகையைக் காதலிப்பவர்கள் மிகவும் பொறுமைசாலியாக இருக்க வேண்டும். ஏனெனில் இவர்களுக்கு முன் கோபம் அதிகம் வரும் மற்றும் இவர்கள் ஓரளவு பொறுப்பற்றவர்கள். இவர்கள் கோபத்தில் பேசுவது எல்லாம் கோபத்தில் வந்த பேச்சுகளாக மட்டும் இருக்குமே தவிர, உண்மையில் இவர்கள் தங்கள் துணையின் மீது அலாதியான அன்பைக் கொண்டவர்கள்.

இரத்த வகை ஏபி
இந்த இரத்த வகையைச் சேர்ந்த மக்கள் மிகவும் நட்புறவானர்கள், கற்பனை வளமிக்கவர்கள், புத்திசாலி, சூழ்நிலைக்கு ஏற்ப நடக்கக்கூடியவர், சில நேரங்களில் தத்துவ மழையைப் பொழிவார்கள். இருப்பினும், இவர்கள் சில நேரங்களில் மந்தமானவர்கள், உணர்ச்சிமிக்கவர்கள் மற்றும் சில தருணங்களில் சுயநலமிக்கவர்கள்.

சமூக வாழ்க்கை
இவர்கள் தங்கள் நண்பர்களின் மீது பாச மழையைப் பொழிவார்கள். மிகவும் நகைச்சுவை உணர்வு கொண்டவர்கள். சில நேரங்களில் அறிவார்ந்த உரையாடல்களில் ஈடுபட்டு, தன்னை சிறந்த பேச்சாளராக நிரூபிப்பார்கள். இருப்பினும் அவர்களது உணர்ச்சிகள் மற்றும் எதிர்பாராத சுபாவம் அவர்களை ஏமாற்றிவிடும்.

பணி வாழ்க்கை
அலுவலகத்தில் வேலை செய்வதற்கு சிறப்பான மக்கள் இவர்கள். ஆனால் இவர்கள் எளிதில் உணர்ச்சிவசப்படுவதோடு, பேசும் அனைத்தையும் மனதில் எடுத்துக் கொள்வார்கள். இதன் காரணமாக இவர்களது உற்பத்தி திறன் குறையலாம்.

காதல் வாழ்க்கை
ஏபி இரத்த வகையினர் தன் துணைக்கு போர் அடிக்காதவாறு தன் காதலை சிறப்பாக எடுத்துச் செல்வார்கள். தன் துணையுடன் செலவழிக்கும் ஒவ்வொரு நொடியையும் சந்தோஷமாகவும், ரொமான்டிக்காகவும் வைத்துக் கொள்வார்கள். இருப்பினும் இவர்கள் மிகவும் சென்சிடிவ் குணமுள்ளவர்கள் என்பதால், இவர்களை நன்கு புரிந்து கொண்டு நடந்தால், உறவு சிறப்பாக செல்லும்.

இரத்த வகை ஓ
ஓ இரத்த வகையினர் நட்புறவு மிக்கவர்கள், கடுமையாக வேலை செய்பவர்கள், தன்னம்பிக்கை உள்ளவர்கள், நேர்மையானவர்கள், தாராள மனம் கொண்டவர்கள். இவர்களது நெகட்டிவ் என்றால், கர்வம் கொண்டவர்கள், பொறுப்பற்றவர்கள், எளிதில் கவனத்தை சிதறவிடுவார்கள் மற்றும் ஆக்கிரோஷ குணமிக்கவர்கள்.

சமூக வாழ்க்கை
சூழ்நிலைக்கு ஏற்ப வளைந்து நடப்பார்கள், வெளிப்படையாக பேசுவார்கள், நிறைய மக்களுடன் பழக விரும்புவார்கள். முக்கியமாக இவர்கள் தன்னைச் சுற்றியுள்ளவர்கள் எப்போதும் சந்தோஷமாக இருக்க வேண்டுமென்று நினைப்பார்கள். இவர்களுடன் இருக்க நிறைய நண்பர்கள் விரும்புவார்கள். ஏனெனில் இவர்கள் நகைச்சுவையுணர்வுடன் பேசுவார்கள்.

பணி வாழ்க்கை
இவர்கள் தங்களின் இலக்கை அடைய மிகவும் கடுமையாக வேலை செய்வார்கள். ஆனால் எளிதில் ஆர்வத்தை இழப்பார்கள். மேலும் இவர்கள் பணியை சிறப்பாக முடிக்க, சரியான ஓர் வழிகாட்டி தேவைப்படுவார்கள்.

காதல் வாழ்க்கை
இந்த வகையினர் மற்றவர்களுடன் தாராளமாக பழகும் குணம், அவர்களது துணைக்கு பிடிக்காமல் இருக்கலாம். இந்த வகை இரத்த பிரிவினர் தன் துணையை கண்டு கொள்ளாமலும், சரியாக அன்பைப் பரிமாறாமலும் இருப்பார்கள். இருப்பினும் தன் துணையின் மீது மிகுந்த காதலைக் கொண்டிருப்பார்கள். இதை இவர்களுக்கு வரும் துணை புரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.
http://poptamil.com/?p=10533

No comments:

Post a Comment