தொலைக்காட்சி!!

Search This Blog

Sunday, June 18, 2017

இந்து கலாச்சாரத்தில் பெண்டிர் ஒழுக்கம்...!

கண்ணதாசனின் அர்த்தமுள்ள இந்து மதத்தில் இருந்து ....................
ஒரு பெண் உத்தமியாக இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் இந்து மதத்தில் தான் புராணங்களில் வரும் எந்த நாயகியும் பத்தினியாக்க காட்சியளிப்பாள்.
குடும்பத்தில் கெட்ட சூழ்நிலை ஏற்படுவதற்குப் பெண்தான் காரணமாக அமைவாள் என்பதால், மானத்தையும் கற்பையும் பெண்ணுக்கே வலியுறுத்திற்று இந்து மதம். கற்பு என்பது, அடிப்படையிலிருந்தே வளர வேண்டுமென்பதற்கு, இந்து மதம் சான்று காட்டி நீதி சொல்கிறது.
இந்து மதம் பெண்களுக்கு மட் டுமல்ல, ஆண்களுக்கும் ஒழுக்கத்தின் அவசியத்தை வலியுறுத்துகிறது. திருமணத்தில் பெண்ணுக்குக் கழுத்தில் மாங்கல்யம் கட்டுகிறார்கள்! அன்று ஆடவனுக்கு காலிலே ‘மெட்டி’ போட்டடார்கள் இவை ஏன்? நிமிர்ந்து நடந்துவரும் ஆடவன் கண்ணுக்கு எதிரே நடந்துவரும் பெண் கழுத்தில் மாங்கல்யம் இருப்பது தெரிய வேண்டும். ‘அவள் அந்நியன் மனைவி’ என்று தெரிந்து அவன் ஒதுங்கிவிட வேண்டும். தலைகுனிந்து நடக்கும் பெண்ணின் கண்களுக்கு எதிரே வரும் ஆடவன் கால்மெட்டி தெரிய வேண்டும். ‘அவன் திருமணமானவன்’எனத்தெரிந்து அவள் ஒதுங்கி விட வேண்டும்.
ஒருபெண்ணும் காளையும் சந்தித்து ஒருவரையொருவர் காதலிக்கலாம். மணம் செய்து கொள்ளலாம். காதல் நிறைவேறவில்லை என்றால பிரிவால் ஏங்கலாம்; துயரத்தால் விம்மலாம்; இறந்தும் போகலாம். ஆனால் திருமணமான ஒருபெண்ணுக்கு பரபுருஷன் மீது ஆசை என்பது கிஞ்சித்தும் வரக்கூடாது. தாலி என்பது பெண்ணுக்குப் போடப்படும் வேலி; அதை அவள்தாண்டமுடியாது.
திருமணத்தின் போது ‘அக்கினி’ வளர்க்கிறார்களே, ஏன்? திருமணமாக முன் வேறு ஆடவன் அவள் உடலை பார்த்து ஆசை கொண்ருந்தால் , அக்கினியால் அவளை பரிசுத்தமாக்க
அம்மி மிதிக்கிறார்களே, ஏன்?
அம்மியின்மீது காலை வைப்பது, ‘என் கால் உன்மீதுதான் இருக்கும்; உன்னைத் தாண்டிப்போஆகது என்று சத்தியம் செய்வதே.“படி தாண்டாதப் பத்தினி’ என்பது வழக்கு. “படியைத் தாண்ட மாட்டேன்” என்பதே அம்மியின் மீது சொல்லப்படுவது.
அருந்ததி பார்ப்பது, அருந்ததியைப்போல் நிரந்தரக் கற்பு நட்சத்திரமாக நின்று மின்னுவேன்” என்று ஆணையிடுவதே.
‘பால்-பழம்’ சாப்பிடுவது ஏன்?
அது “பாலோடு சேர்ந்த பழம்போலச் சுவை பெறுவோம்” என்று கூறுவதே.
பூ மணம் இடுவது ஏன்?
“பூமணம்போலப் புகழ் மணம் பரப்புவோம்” என்றே!
மாங்கல்யத்தில் மூன்று முடிச்சுப் போடுவதேன்? ஒரு முடிச்சு கணவனுக்கு அடங்கியவளென்றும், மறு முடிச்சு தாய் தந்தையருக்குக்கட்டுப்பட்டவளென்றும், மூன்றாவது முடிச்சு தெய்வத்துக்குப் பயந்தவளென்றும் உறுதி கொள்ள வைப்பதே.
‘கற்புடைய பெண் நினைத்தால் கடவுள்களையே குழந்தைகள் ஆக்கலாம்’ என்று போதிக்கும் அனுசூயையின் கதை.
‘கற்புடைய பெண் விரும்பினால், சூரியனையே உதிக்காமல் செய்யலாம்’ என்று கூறும் நளாயினியின் கதை.
கற்புடைய பெண் மரணத்தையும் வெல்லுவாள்’ என்று கூறும் சாவித்திரியின் கதை.
கொல்லப்பட்டான் கணவன் என்றறிந்து, துடித்தெழுந்து மதுரைநகர் வலம் வந்து, ‘செங்கதிர்ச் செல்வனே! என் கணவன் கள்வனா?” என்று நியாயம் கேட்டுத் துர்க்கைக் கோயிலில் வளையல்களை உடைத்து மதுரையை எரித்தாள் கண்ணகி.
“கல்லானாலும் கணவன்! புல்லானாலும் புருஷன்” என்பது இந்துக்கள் பழமொழி.
“உன் கணவன் மனது கல்லானாலும், அவன் உனக்கக்கணவனே; சம்பாதிக்க முடியாத சக்தியற்ற கோழையாக ஊருக்குப் புன்மையானவனாக, வெறும் புல்லைப் போல இருந்தாலும், அவன் உனக்குப் புருஷனே” என்பது அதன்பொருள்.
அறியாமல் செய்த பிழைகள் மன்னிக்கப்ட வேண்டியவையே! அதற்கு உதாரணம் தான் அகலியின் கதை . அகலிகையை ஒரு முனிவன் மணந்தான்.
அகலிகையை அடைய நினைத்த இந்திரன்
ஒருநாள் நள்ளிரவில் இந்திரன் சேவல் வடிவமெடுத்தான்; பொழுது விடிந்துவிட்டது. போலக்கூவினான்.
உண்மையறியாத முனிவன் சந்தியாவந்தனத்திற்குப் புறப்பட்டான்.
இந்திரன், முனிவன்போல் வேடமிட்டு அகலிகையை நெருக்கினான்.
திரும்பி வந்த முனிவன் உண்மையறிந்தான். அகலிகையைக் கல்லாகச் சபித்துவிட்டான்.
ராம்பிரானின் காலடிபட்டுத்தான் அந்த சாபம் நீங்க , அகலிகைமீண்டும் உயிர் பெற்றாள்.
முனிவனோ, “நான் என்று நினைத்து இன்னொருவனோடு அவள் கலந்ததெப்படி? இவள் பத்தினியானால் எனக்கும் இன்னொருவனுக்கும் ‘பேதம்’ தெரியாதா?” என்று கேட்டான்.
அதற்கு ராம்பிரான் சொன்னார்:
“கடந்த காலம், நிகழ்காலம்,எதிர்காலம் ஆகிய திரிகாலமும் அறிந்த முனிவன் நீயே உண்மைச் சேவல் எது, பொய்ச்சேவல் எது என்று தெரியாமல் சந்தியாவந்தனத்துக்குப்பிறப்பட்டாயே! அவளோ ஒரு காலமும் தெரியாத பேதை! உள்ளத்தால் உன்னையே நினைத்தாள். உடலால் தான் கெட்டாள். ஆகவே ஏற்றுக்கொள்வது உன் கடமை”.முனிவன் அவளை ஏற்றுக்கொண்டு விட்டான்.
அறியாமல் செய்த பிழைகள் விதிக்கணக்கில் சேர்க்கப்பட வேண்டியவையே! ‘அறிந்து கெடக்கூடாது’ எனக் குலமாதருக்கு விதித்த தடை, நமது குடும்ப வாழ்வை எவ்வளவு நிம்மதியாக்கி இருக்கிறது! கற்பு என்றொரு வேலி போட்டு, பெண்ளைத் தெய்வங்களாக்கி, குடும்பங்களை மகிழ்ச்சிகரமாக்கிய ‘ இந்து மதமே, உன்னை என் உயிராக நேசிக்கிறேன்.’

No comments:

Post a Comment