தொலைக்காட்சி!!

Search This Blog

Wednesday, June 21, 2017

தேங்காய் மூடியில் இப்படி ஒரு அற்புதமா? நரைமுடிக்கு உடனடி தீர்வு

தலை முடியில் எண்ணெய் பசை குறைவாக இருப்பதால், இளம் வயதிலே நரை முடி பிரச்சனைகள் ஏற்படுகிறது.
அதனை போக்க, கடைகளில் கிடைக்கும் ரசாயனங்கள் நிறைந்த சாயங்களை பயன்படுத்தி, ஒவ்வாமை, தோல் அலர்ஜி போன்ற பிரச்சனைகளுக்கு தள்ளப்படுகின்றோம்.
ஆனால் இயற்கை முறையில் எவ்வித பக்கவிளைவும் ஏற்படாமல், நரை முடியை கருமையாக்க ஒரு அற்புதமான வழி உள்ளது.
தேவையான பொருட்கள்
  • தேங்காய் மூடிகள்
  • நெல்லிக்காய் ஓடுகள்
  • தேங்காய் எண்ணெய் -1/2 லிட்டர்
தயாரிக்கும் முறை
முதலில் தேங்காய் மூடியை நெருப்பில் சுட்டு கரியாக்க வேண்டும். பின் அதனை பொடி செய்து, தேங்காய் எண்ணெயுடன் கலந்து, அதை வெயிலில் சில நாட்கள் வைத்து பயன்படுத்த வேண்டும். இதே முறையில், தேங்காய் ஓடுகளுக்கு பதிலாக, நெல்லிக்காய் ஓடுகளை கூட பயன்படுத்தலாம்.
பயன்படுத்தும் முறை
தேங்காய் ஓடுகள் கொண்டு தயாரித்த எண்ணெய்யை தலை முடிகளில் தடவி அப்படியே இருக்கலாம் அல்லது எண்ணெய் தேய்த்து சில மணி நேரம் கழித்து குளிக்கலாம்.
நன்மைகள்
இந்த எண்ணெய்யை தினமும் தலையில் தடவி வந்தால், நரைத்த முடிகள் மறைவதைக் காணலாம். இந்த எண்ணெய் உடலுக்கு குளிர்ச்சியையும் தருகிறது.
http://news.lankasri.com/beauty/03/127353?ref=lankasritop

No comments:

Post a Comment