தொலைக்காட்சி!!

Search This Blog

Monday, June 19, 2017

கடவுள்களின் மர்மம்! மனிதர்களை அவதானிக்கும் இருண்ட கிரகம்.. வெளிப்பட்ட இரகசியம்!

பூமியில் வேற்றுக்கிரகவாசிகள் என்ற பதிவின் மூலம் வேற்றுக் கிரகங்களுக்கும் பூமிக்கும், பூமிவாசிகளுக்கும் உள்ள தொடர்புகள் பற்றி தொடராக பார்த்துக் கொண்டு வருகின்றோம்.
அந்த வகையில் சென்ற பதிவுகளில் வேற்றுக்கிரகத்தவர் ஏன் பூமிக்கு வந்தார்கள்? அவர்களுக்கு தேவைப்பட்டது என்ன? என்பதோடு பல விடயங்களை பற்றி பார்த்திருந்தோம். பாகம் 01பாகம் 02
அதனைத் தொடர்ந்து வேற்றுக்கிரகவாசிகளுக்கும், கடவுள்களுக்கும் உள்ள தொடர்பினையும் பற்றி ஆராயலாம்.
இது முற்று முழுதான அறிவியல், விஞ்ஞானம் தொடர்பானதும், ஆய்வாளர்கள் ஆய்வின் மூலம் கூறும் விடயங்களின் அடிப்படையில் எழுதப்பட்டது மாத்திரமே. மதக் கோட்பாடுகளையும், நம்பிக்கைகளையும் சுட்டிக்காட்டுவது அல்ல.
இப்போது பூமியில் பல்வேறு கடவுள்கள் காணப்படுகின்றனர், அவர்கள் அனைவருமே ஒரு காலத்தில் மனிதர்களுக்கு ஆணையிட்ட தலைவர்களே என ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.
Zecharia Sitchin இது குறித்து பல வருடங்கள் ஆய்வு செய்து ஒரு புத்தகத்தினையும் வெளியிட்டார். அதனை பல ஆய்வாளர்களும் ஏற்றுக் கொள்கின்றனர்.
மேலும் சுமேரிய பதிவுகள், மற்றும் தொல்பொருள் ஆய்வுகள் ஊடாக கிடைக்கப்பெற்ற சான்றுகளுடன் மதங்களையும், வேதங்களையும் இணைத்து ஆராய்ந்தனர்.
இதன் ஊடாக ஓர் மிகப்பெரிய இரகசியம் வெளிப்பட்டதாக தெரிவித்துள்ளனர். அதாவது ஒட்டு மொத்த உலக மதங்களும் ஒரு இடத்தில் இருந்து ஆரம்பமானதே என்ற உண்மையே அது.
அதன் அடிப்படையில் முதலாவதாக வேதங்களையும், இந்துக் கடவுள்களையும் - வேற்றுக்கிரக சான்றுகளோடும், சுமேரியர்களின் குறிப்புகளோடும் ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.
அதன் மூலம் இந்துக் கடவுள்களான பிரம்மா, விஷ்ணு, சிவன், காளி போன்றோர் வேற்றுக்கிரகத்தில் இருந்து வந்து மனிதர்களுக்கு தலைவர்களாக இருந்தவர்களே என ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.
இதில் பிரம்மா - அனு எனவும், விஷ்ணு - என்கி எனவும், சிவன் - என்லின் எனவும் சுமேரியர்கள் வணங்கியதாகவும், அவர்கள் நட்சத்திரத்தில் இருந்து வந்தவர்கள் எனவும் குறிப்புகள் கூறுகின்றன. (ANU, ENKI, ENLIL)
மேலும் வேற்றுக்கிரகம் தொடர்பாக ஆய்வு செய்த போது கிடைத்த சான்றுகளையும், பண்டைய குகை ஓவியங்களையும் ஆய்வு செய்து இந்துக் கடவுள்களுக்கும், நட்சத்திரங்களில் இருந்து வந்ததாக சுமேரியர்கள் கூறும் தலைவர்களுக்கும் இடையேயான ஒற்றுமைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
சங்கு போன்ற வடிவத்தை கையில் ஏந்தியிருக்கும் என்கி ENKI எனப்படுகின்றவர், இந்துக்கள் வழிபடும், காத்தல் தொழில் செய்யும் விஷ்ணுவின் உருவ அமைப்புகளுடன் ஒத்துப் போகின்றது.
அதேபோல் அனு (ANU) எனப்படும் ஆதி கால மனிதர்களின் வேற்றுக்கிரக தலைவர் இந்துக்களின் பிரம்மன் எனும் கடவுளுடன் ஒத்துப் போவதாகவும், அனு படைக்கும் தொழிலைச் செய்து வந்ததாகவும் சுமேரியப் பதிவுகள் கூறுகின்றன.
அடுத்தது அழிக்கும் தொழிலைச் செய்ததாக சுமேரியக் குறிப்புகள் கூறும் என்லின் (ENLIL) இந்துக்களின் கடவுள் சிவன், உருத்திரன் என்ற கடவுளுடன் மிகச்சரியாக ஒத்துப்போவதாகவும் கூறுகின்றனர் ஆய்வாளர்கள்.
அதேபோன்று சிங்கத்துடன் வரும் காளிக்கும், அப்போதைய சுமேரியர்களின் தலைவி இண்ணாவிற்கும் முழு ஒற்றுமைகள் காணப்படுவதாகவும் ஆய்வாளர்கள் அடித்துக் கூறுகின்றனர்.
இதே போன்று பல இந்துக் கடவுள்கள், அப்போது வேற்றுக்கிரகங்களில் இருந்து வந்தவர்களினால் மாற்றம் அடைந்து வந்ததே எனவும் கூறப்படுகின்றது.
அதேபோன்று கடவுள்களின் இருப்பிடங்களாக கூறப்படும் அனைத்து மதங்களின் வழிபாட்டுத்தலங்களுக்கும் ஒரே வகை ஒற்றுமையே காணப்பட்டு வருகின்றது.
இவற்றின் மூலம் நட்சத்திரங்களில் இருந்து வந்ததாக கூறப்படும் அல்லது ஒளியைப் பிரதிநிதித்துவப்படுத்தி கடவுள்களைக் கூறுவதற்கும் வேற்றுக்கிரகவாசிகளின் தொடர்பே காரணம் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
மேலும் வேற்றுக்கிரகவாசிகள் தலைவர்களாக செயற்பட்டு மனிதர்களுக்கு நாகரீகத்தையும், வாழ்க்கை முறையையும் கற்றுக் கொடுத்து வந்துள்ளனர். அதன் பின்னர் காலப்போக்கில் அவர்களையே கடவுள்களாக மனிதர்கள் மாற்றியுள்ளனர் (பின்பற்றியுள்ளனர்) எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
மதங்களின் நம்பிக்கையும் சரி, புராணங்களும் சரி அனைத்தும் கூறுவது வானத்தில் இருந்தே தமது கடவுள்கள் வருகைத் தந்ததாகவே.
இது தவிர புராணங்களும், சுமேரியப் பதிவுகளும் ஓர் இருண்ட கிரகம் பூமியை அவதானித்துக் கொண்டே இருக்கும் என கூறியுள்ளன.
வேற்றுக்கிரகங்கள் தொடர்பில் ஆய்வு செய்கின்றவர்கள், அது வேற்றுக் கிரகவாசிகளின் இருப்பிடமாக இருக்கக் கூடும் எனவும் ஓர் கருத்தினை தெரிவித்துள்ளனர்.
குறித்த கிரகம் ஒளியை பிரதிபளிக்காத காரணத்தினால் இலகுவாக தெரிவதில்லை எனவும் கூறியுள்ளனர். இதனை விண்வெளி தொடர்பில் ஆய்வு செய்கின்றவர்களும் ஏற்றுக் கொண்டுள்ளார்கள்.
இது பற்றி விரிவாக பார்ப்பதோடு, இன்னும் பல வகையிலும் வேற்றுக்கிரகங்களுக்கும் மனிதர்களுக்கும் உள்ள தொடர்பினை ஆராய்வோம் அடுத்த பதிவில்..,
http://www.tamilwin.com/science/01/146751?ref=home-feed

No comments:

Post a Comment