தொலைக்காட்சி!!

Search This Blog

Saturday, June 24, 2017

இரவில் மட்டும் பேசிக்கொள்ளும் கடவுள் சிலைகள்: எங்கு தெரியுமா?

உலகில் உள்ள ஒவ்வொரு கோயிலும் அதற்கேற்ப பெருமைகள் மற்றும் சிறப்புக்களை கொண்டு தனித்தன்மையோடு விளங்கும்.
ஆனால் அவற்றில் சில மர்மங்கள் எளிதில் நம்ப முடியாததாகவும், நம்மை அப்படியே வியப்பில் ஆழ்த்துவதாகவும் அமையும்.
அந்த வகையில், 400 வருட பழமை வாய்ந்த கோவிலாக திகழும் ராஜராஜேஸ்வரி பால திரிபுர சுந்தரி எனும் கோவில் பீகார் மாநிலத்தில் பக்ஸார் எனும் பகுதியில் அமைந்துள்ளது.
இங்கு வந்து வழிபட்டால், திரிபுர சுந்தரி, நம் வாழ்வில் பல மாற்றங்களைக் கொண்டு வருவார் என்பது நம்பிக்கையாக இருந்து வருகிறது.
இந்த கோயிலின் முன் வாயில், பக்தர்களை வரவேற்கும் படி மிகுவும் பிரம்மாண்டமாக இருக்கும். அப்படி உள்ள இந்த கோவிலில் இரவு நேரங்களில் மட்டும் பல மர்மமான குரல்கள் ஒலிக்கின்றது என்று பக்தர்கள் சிலர் கூறுகின்றனர்.
இந்த கோவில் பூசாரிகள், கோவிலின் கருவறையில் இருந்து வரும் இந்த ஒலிகள், தாய் திரிபுர சுந்தரியின் அருள்வாக்கு என்று கூறுகின்றனர்.
ஆனால் உண்மையில், அந்த பேச்சு சத்தங்கள் கருவறைக்கு வெளியில் கேட்பதாக கோயிலில் தங்கியிருப்பவர்கள் கூறுகின்றனர்.
இதுகுறித்து பல ஞானிகள் மற்றும் கோயில் பெரியவர்களுக்கு உள்ள சந்தேகங்கள் அவர்களுக்கே தெரியாத ஒரு புரியாத புதிராக உள்ளது.
http://news.lankasri.com/history/03/127552?ref=right_featured

No comments:

Post a Comment