தொலைக்காட்சி!!

Search This Blog

Tuesday, June 13, 2017

இந்த அறிகுறிகள் தென்படுதா? உங்க கையில் பணம் தங்காதாம்!

ஒரு நோயின் தாக்கம் ஏற்பட போகிறது என்பதற்கு முன்னதாக எப்படி அறிகுறிகள் தென்படுகிறதோ, அதேபோல் உங்கள் கையில் பணம் தங்காது என்பதை உணர்த்தும் வகையில் சில அறிகுறிகள் தென்படும் என்று ஜோதிடம் கூறுகிறது.
ஜோதிடம் கூறும் பணம் தங்காது என்பதன் அறிகுறிகள் என்ன?
  • ஒருவரின் வீட்டில் அடிக்கடி தண்ணீர் மற்றும் மின்சார இணைப்பு பிரச்சனைகள் ஏற்பட்டால், வீண் செலவுகள் அதிகரிக்கும் என்பதை குறிக்கிறது.
  • குடும்பத்தில் உள்ள தம்பதிகள் இருவருக்கும் அடிக்கடி வழக்கத்திற்கு மாறாக சண்டை சச்சரவுகள் ஏற்பட்டால் அது அவர்கள் வீட்டில் செல்வ வளம் குறையும் என்று அர்த்தம்.
  • ஒருவரை தேடி வந்த நல்ல வாய்ப்பு, திடீரென்று கை நழுவி போனால், அது நிதி பிரச்சனையால் கஷ்டப்பட நேரிடும் என்பதை குறிக்கிறது.
  • நிதி பிரச்சனை ஏற்பட போகிறது என்பதை உணர்த்தும் வகையில், அவர்களது வாயில் இருந்து அளவுக்கு அதிகமாக எச்சில் சுரக்கும் என்று ஜோதிடம் கூறுகிறது.
  • வீட்டில் உள்ள வளர்க்கும் செல்லப் பிராணி திடீரென்று இறந்து விட்டால், அந்த குடிம்பத்தினர் பணக் கஷ்டத்தை சந்திக்க நேரிடும் என்று அர்த்தம்.
  • ஒருவர் வீட்டின் மேற்கூரையில் இருந்து நீர் ஒழுக ஆரம்பித்தால், அது கடுமையான பணப் பிரச்சனை ஏற்படும் என்பதை உணர்த்துகிறது.
  • ஒருவரின் கைவிரலில் உள்ள சூரிய மேடு பகுதியில் திடீரென்று மச்சம் உருவானால், அது அவர்களின் சேமிப்பு பணங்கள் போய்விடும் என்று அர்த்தம்.
  • வீட்டின் நுழைவாயிலில் எண்ணெய் சிதறினால், அது பணப் பிரச்சனையை ஏற்படுத்தும் என்று அர்த்தம்.
  • ஒருவர் நகைகளை இழந்தாலோ அல்லது வீட்டில் நகைகள் வைத்த இடம் தெரியாமல் மறந்தால், அது பெரிய பண இழப்பை ஏற்படுத்த போவதாக அர்த்தமாகும்.
http://news.lankasri.com/lifestyle/03/126912?ref=lankasritop

No comments:

Post a Comment