தொலைக்காட்சி!!

Search This Blog

Tuesday, June 6, 2017

ஆங்கில மாதங்களின் அர்த்தங்கள் !!?

ஆங்கில மாதங்களில் உள்ள ஒவ்வொரு மாதத்திற்கும் ஒவ்வொரு பெயர் உண்டு. அந்த பெயர் வந்தது எப்படி? என்பதற்கான காரணத்தை பற்றி பார்ப்போம்..
ஜனவரி
ஜனவரி மாதத்தின் பெயர், ஜனஸ் என்ற ரோமானிய கடவுளின் பெயரால் அமைந்தது. ஜனஸ் என்ற ரோமானிய கடவுளுக்கு கடந்தகாலம் மற்றும் எதிர்காலத்தைக் குறிக்கும் இரண்டு தலைகள் இருக்கின்றது.
பிப்ரவரி
ரோமானியர்கள் பிப்ரவரி மாதத்தின் 15-ம் நாளை புனிதமாகக் கருதி பெப்ருய என்று பெயரிட்டு அழைத்தனர். பெப்ருய என்பதற்கு தூய்மை செய்து கொள்ளுதல் என்று பொருளாகும். அதைக் குறிக்கும் வகையில் பெப்ருரியவஸ் என்று பெயரிட்டனர். அதுவே பிப்ரவரி என மாறியது.
மார்ச்
மார்ச் மாதமானது மார்ஸ் என்ற ரோமானிய போர்க்கடவுள் மற்றும் விவசாயக் கடவுளின் பெயர் ஆகும். இந்த மார்ஸ் கடவுள் ஈட்டி, கேடயத்துடன் காட்சியளிக்கும். மார்ஸ் என்ற கடவுளின் பெயரால் தோன்றியது தான் மார்ச் மாதம் ஆகும்.
ஏப்ரல்
ஏப்ரல் மாதமானது ஏப்பிரைர் என்ற லத்தீன் சொல்லின் படி, திறந்து விடு என்று பொருள். ஆண்டின் செழிப்புக்கு வழி பிறக்கும் மாதம் என்பதால், இந்த லத்தீன் சொல்லில் இருந்து ஏப்ரல் மாதமாக மாறியது.
மே
உலகத்தை சுமக்கும் அட்லஸ் மகளின் பெயர் மையா என்ற தேவதை ஆவாள். மையாவின் பெயரால் தோன்றிய மாதம் தான் மே மாதம் என்று கூறப்பட்டது.
ஜூன்
ரோமானியர்கள் ஜுனோ எனும் தேவதையை இளமையின் சின்னமாக வழிபட்டு வந்தனர். அந்த தேவதையின் பெயரால் வந்தது ஜுன் மாதம் என்று பெயர் வந்தது.
ஜூலை
ஆரம்ப காலத்தில் ஐந்தாவது மாதமாக ஜூலை மாதம் இருந்தது. ஐந்தை க்விண்டிஸ் என்பார்கள்.
மார்க் ஆண்டனி இந்தப் பெயரை மாற்றி ஜுலியஸ் சீசரின் பெயரால் ஜுலி என்று பெயர் சூட்டினார் அது தான் ஜூலை மாதமாக மாறியது.
ஆகஸ்ட்
ஆகஸ்ட் மாதமானது ஆரம்பத்தில் ஆறாவது மாதமாக இருந்தது. ஆறு என்ற எண்ணை செக்ஸ்டிலிஸ் என்ற கிரேக்க மொழியில் அழைத்தனர்.
பின் ஜுலியஸ் சீசர் இந்த மாதத்தை எட்டாவது மாதமாக மாற்றிய பின் ரோமானியர்கள் தங்கள் மன்னரான அகஸ்டஸை பெருமைப்படுத்தும் விதத்தில் அகஸ்ட்ஸ் என்று பெயரிட்டனர். அதுவே ஆகஸ்ட் என்று மாறியது.
செப்டம்பர்
ரோமானிய மொழியில் ஏழு என்ற எண்ணை செப்டம் என்பார்கள். மார்ச் முதல் மாதமாக இருந்த காலத்தில் செப்டம்பர் ஏழாவது மாதமாக இருந்தது. அதனால் இம்மாதம் செப்டம்பர் என்று கூறப்பட்டது.
அக்டோபர்
அக்டோபர் மாதம் ஆரம்பத்தில் எட்டாவது மாதமாக இருந்தது. அக்ட்டோ என்றால் எட்டு என்று பொருள். எனவே இம்மாதம் அக்டோபர் என்று கூறப்பட்டது.
நவம்பர்
நவம்பர் மாதத்தில் உள்ள நவம் என்பதற்கு, ஒன்பது என்று அர்த்தம். இந்த மாதம் முதலில் ஒன்பதாவது மாதமாக இருந்ததால், நவம்பர் என்று கூறப்பட்டது.
டிசம்பர்
டிசம்பர் மாதத்தில் உள்ள டிசம் என்பதற்கு பத்து என்று அர்த்தம். இந்த மாதம் முதலில் பத்தாவதாக இருந்ததால், டிசம்பர் என்று அழைக்கப்பட்டது.
http://news.lankasri.com/lifestyle/03/126535?ref=lankasritop

No comments:

Post a Comment