தொலைக்காட்சி!!

Search This Blog

Sunday, June 11, 2017

எகிப்திய பெண்களின் அழகின் ரகசியம்!

அழகை பராமரிப்பதில் ஒவ்வொரு நாட்டிலும் வித்தியாசமான முறைகளை பயன்படுத்துகிறார்கள்.
நாம் இப்போது எகிப்திய நாட்டில் உள்ள பெண்களின் அழகின் ரகசியங்களைப் பற்றித் தெரிந்துக் கொள்வோம்!
பால் மற்றும் தேன்
பால் மற்றும் தேன் சருமத்தில் அதிக ஈரப்பதத்தை அளிப்பதால், எகிப்திய நாட்டு மக்கள் குளிக்கும் போது தங்களின் உடல் முழுவதும் பாலையும், தேனையும் ஒன்றாக கலந்து தேய்த்துக் குளிக்கிறார்கள். இதனால் அவர்களின் சருமம் மிகவும் மிருதுவாக இருக்கிறது.
தேங்காய் மற்றும் ஷீயாபட்டர்
ஷீயாபட்டர் என்பது நட்ஸ்களில் இருந்து பிரித்தெடுக்கப்படும் வெண்ணெய்.
இந்த வெண்ணெயையும், தேங்காயையும் ஒன்றாக கலந்து கூந்தலுக்கு கண்டிஷனராகவும், சிகை அலங்காரமாகவும் பயன்படுத்துகின்றார்கள்.
கடல் உப்பு
கடல் உப்பை தண்ணீரில் கரைத்து, அதை உடல் மற்றும் முகத்திற்கு தினமும் தேய்த்துக் குளிப்பதை வழக்கமாக வைத்துள்ளார்கள்.
இதனால் சருமத்தில் தேங்கி இருக்கும் இறந்த செல்கள் மற்றும் அழுக்குகள் வெளியேற்றப்பட்டு முகம் மென்மையாக இருக்கிறது.
வெந்தயம்
வெந்தயத்தில் ஆன்டி- ஆக்ஸிடென்டுகள் அதிகமாக இருப்பதால், இவை இளமையை நீட்டித்து, முகத்தில் சுருக்கம் ஏற்படாமல் தடுக்கிறது.
இதனால் தினமும் வெந்தயத்தை அரைத்து முகத்தில் போட்டு குளிப்பதுடன், வெந்தய டீயை அதிகமாக குடிக்கின்றார்கள்.
பாதாம் எண்ணெய்
பாதாம் எண்ணெயை தினமும் முகத்தில் தேய்த்துக் குளிப்பதால், முகத்தில் நெகிழ்வுத் தன்மையும், மென்மையும் அதிகரித்து, இளம் வயதில் ஏற்படும் சருமப் பிரச்சனைகளைத் தடுக்கிறது.
சோற்றுக் கற்றாழை
இயற்கை குணம் நிறைந்த சோற்றுக் கற்றாழை, சுருக்கங்கள் இல்லாத சருமத்தையும், பளபளப்பையும் தருவதால், அவர்கள் பயன்படுத்தும் அனைத்து அழகு சாதனப் பொருட்களிலும் சோற்றுக் கற்றாழையை பயன்படுத்துகிறார்கள்.
இயற்கை அழகுப் பொருட்கள்
எகிப்திய பெண்கள் மேக்கப் செய்யும் போது, அவர்கள் பயன்படுத்தும் அழகு சாதனப் பொருட்கள் முழுவதும் இயற்கை நிறைந்த பொருட்களை பயன்படுத்துகிறார்கள்.
கைகளில் உள்ள நகம், தலைமுடி ஆகியவற்றிற்கு மருதாணி மூலம் நிறத்தை அளிக்கின்றனர்.
பீட்ரூட்டை காயவைத்து பொடி செய்து, அதை உதட்டிற்கு லிப்ஸ்ட்டிக்காகவும், கண் இமைகளுக்கு வண்ணமாகவும் தீட்டுகின்றனர்.
காய்ந்த பாதாம் பருப்பை எடுத்து எரித்து அதை கண்களுக்கு போடும் மைகளாக பயன்படுத்துகின்றார்கள்.
http://news.lankasri.com/beauty/03/111052?ref=right_featured

No comments:

Post a Comment