தொலைக்காட்சி!!

Search This Blog

Monday, June 19, 2017

தூங்கி எழுந்து 60 நொடிக்குள் நீர் குடியுங்கள்: இந்த அற்புதத்தை பெறலாம்

காலையில் உறங்கி எழுந்ததும் 60 நொடிகளுக்குள் தண்ணீர் குடிப்பதால், நம் உடலில் ஏற்படும் அற்புத மாற்றங்கள் என்னெவென்று பார்ப்போம்.
உடலில் ஏற்படும் மாற்றங்கள் என்ன?
  • தூங்கி எழுந்து 300 மி.லி அளவு தண்ணீரை குடித்தால், உடலில் வளர்சிதை மாற்றம் ஒன்றரை மணி நேரத்தில் 24% அதிகமாகும்.
  • தண்ணீர் ரத்தத்தில் உள்ள நச்சுக்களை போக்கி, உடலில் தேவையின்றி இருக்கும் கிருமிகள் அனைத்தையும் வெளியேற்றி, உடல் முழுவதையும் சுத்தமாக்குகிறது.
  • தூங்கி எழுந்த 60 நொடிகளில் நீர் குடிப்பதால், பசி குறையும். இதனால் உடலில் உள்ள கலோரிகள் மற்றும் கொழுப்புகளை கரைத்து, உடல் பருமன் அதிகரிப்பதை குறைக்கிறது.
  • தினமும் தண்ணீரை அதிகமாக குடித்து வருவதன் மூலம் உடலில் நீர்ச்சத்து குறையாமல் இருக்கும். இதனால் நம் உடலின் நிணநீர் மண்டலத்தின் ஆரோக்கியம் மேம்பட்டு, நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
  • சீரான அளவில் தினமும் நீர் குடிக்கும் பழக்கத்தை பின்பற்றி வந்தால், சருமத்தில் அதிக சுருக்கம், வறட்சி ஏற்படுவதை தடுத்து, சருமத்தின் ஆரோக்கியம் மேம்படும்.
  • காலை எழுந்ததும் 60 நொடிகளுக்குள் நீர் குடித்து வந்தால், மலம் கழிப்பதில் பிரச்சனைகள் வராது. இதனால் மலச்சிக்கல் பிரச்சனைகள் வராமல் தடுக்க முடியும்.
http://news.lankasri.com/health/03/127238?ref=right_featured

No comments:

Post a Comment