தொலைக்காட்சி!!

Search This Blog

Tuesday, May 30, 2017

தினமும் பருப்பு சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா?

அன்றாடம் உணவில் பருப்பினை சேர்த்துக்கொண்டால் உடலில் செரிமானம் சீராக நடக்கும்.
அதுமட்டுமின்றி பெருங்குடல் இயக்கம் சிறப்பாக நடைபெறும், சத்துக்களின் குறைபாடு ஏற்படாமல் இருக்க, இதயத்தின் நலனை பாதுகாக்க பருப்புகளை சாப்பிடுங்கள்.
புரதம்
ஒரு கப் பருப்பில் ஏறத்தாழ 18 கிராம் புரதச்சத்து இருக்கிறது. பருப்பு உணவுகளில் சிறந்தளவிலான புரதம் கிடைக்கிறது. இது புற்றுநோய் மற்றும் இதய பாதிப்புகள் அதிகம் உண்டாகாமல் இருக்க பயனளிக்கிறது.
செரிமானம்
எளிதாக செரிமானம் ஆக உதவும் உணவுகளில் பருப்பு உணவுகள் சிறந்தவை. இதில் இருக்கும் நார்ச்சத்து செரிமானத்தை ஊக்குவிப்பது மட்டுமில்லாமல் பெருங்குடல் புற்றுநோய் உண்டாகாமல் பாதுகாக்கவும் உதவுகிறது.
இதய பாதுகாப்பு
பருப்பு உணவுகளில் இருக்கும் போதுமான அளவு ஃபோலேட், மெக்னீசியம் இதய நலனை ஊக்குவிக்கின்றன. ஃபோலிக் அமிலம் இதய சுவர்களை வலுப்படுத்தவும், இதய நோய்கள் ஏற்படாமல் இருக்கவும் உதவுகிறது. மேலும், இது இரத்த ஓட்டத்தை சீராக்கவும் பயனளிக்கிறது.
இரும்புச்சத்து
இரத்த சோகை இருப்பவர்கள் தினமும் ஏதேனும் ஒரு பருப்பு உணவை வேகவைத்து உண்டு வந்தால் இரத்த சோகை பிரச்சனைக்கு நல்ல தீர்வுக் காண முடியும்.
மினரல்ஸ், ஆண்டி- ஆக்ஸிடன்ட்ஸ்
மெக்னீசியம், ஜின்க், இரும்புச்சத்து போன்றவை மிகுதியாக பருப்பு உணவுகளில் இருக்கின்றன. இதில் இருக்கும் வைட்டமின் எ மற்றும் சி உடலில் சேதமடைந்துள்ள செல்களை புத்துயிர் அளிக்கிறது.
புற்றுநோய்
பருப்பு உணவுகளில் இயற்கையாகவே புற்றுநோய் செல்களை எதிர்த்து போராடும் தன்மை இருக்கிறது. இது புற்றுநோய் உண்டாக்கும் செல்கள் மற்றும் கட்டிகளின் வளர்ச்சியை தடுக்க உதவுகிறது.
http://news.lankasri.com/food/03/124104?ref=right_featured

No comments:

Post a Comment