தொலைக்காட்சி!!

Search This Blog

Friday, May 19, 2017

அதிசயம்....! தலைகீழாக விழும் கோபுர நிழல்: எங்கு தெரியுமா?

கர்நாடக மாநிலத்தின் பெல்லாரி மாவட்டத்தில், ஹம்பி எனும் இடத்தில் விருபாட்சர் கோயில் அமைந்துள்ளது.
1300 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட இந்த கோயில், கட்டடக்கலை மற்றும் பல மர்மங்களுக்கு சான்றாக இருப்பதுடன், யுனெஸ்கோவால் உலக பாரம்பரியச் சின்னமாக திகழ்கிறது.
துங்கபத்திரை ஆற்றங்கரையில் அமைந்துள்ள இந்த கோயில் பெரும்பாலும் விஜயநகர பேரரசால் கட்டப்பட்டு பராமரிக்கப்பட்டது.
இந்த கோயிலில் கோபுரத்தின் நிழல் தலைகீழாக விழும் மர்மத்தை பலர் ஆச்சரியத்துடன் பார்த்து செல்கின்றனர்.
கோவிலின் மத்தியில் அமைந்துள்ள மைய மண்டபம் ரங்க மண்டபம் என்று அழைக்கப்படுகிறது. இது 1510ம் ஆண்டு கிருஷ்ணதேவராயரால் கட்டப்பட்டதாக தெரிகிறது.
விருபாட்சா கோயிலின் சிறப்புகள் என்ன?
படையெடுப்புகள் எத்தனை வந்தாலும் இந்த கோயிலை எதுவும் செய்ய முடியவில்லையாம். 1565ம் ஆண்டு இந்த நகரமே அழிந்த போதும் கூட இந்த கோயில் மட்டும் கம்பீரத்துடன் காட்சியளித்ததாம்.
7-ஆம் நூற்றாண்டில் இருந்து இயங்கி வரும் இந்த கோயிலில் இதுவரை எந்த இடையூறுகளும் ஏற்பட்டதில்லையாம். எனவே இந்தியாவின் வெகுகாலமாக இயங்கிவரும் ஒரே கோயில் விருபாட்சா என்று கூறப்படுகிறது.
இந்த கோயில் துங்கபத்திரை நதிக்கரையில் இயற்கை எழில் கொஞ்சும் விதத்தில் கட்டப்பட்டுள்ளது. இது அளவீட்டில் மிகச் சிறிய கோயிலாக இருந்தாலும் இதன் வளாகம் மிகப் பெரியது.
இங்குள்ள கல்வெட்டுகள் மற்றும் சில ஆதாரங்கள் இந்த கோயில் சாளுக்யா மற்றும் ஹொய்சாலா வம்சத்தினர் கட்டியதற்கான உறுதிப்பாட்டை தருகின்றது.
இந்த கோவிலை சுற்றிலும் சிறிய கோயில்கள், தூண் மண்டபங்கள், கொடிக் கம்பங்கள், விளக்கு கம்பங்கள் போன்று ஒரு நகரத்தைப் போல கட்டமைத்துள்ளனர்.
கோவிலில் நிழல் தலைகீழாக விழுவதற்கான ஆதாரங்கள் இதோ..!

http://news.lankasri.com/travel/03/125502?ref=lankasritop

No comments:

Post a Comment