தொலைக்காட்சி!!

Search This Blog

Thursday, May 25, 2017

பற்களின் மஞ்சள் நிறத்தை போக்க: அற்புதமான பேஸ்ட் இதோ

அனைவருடைய புன்னகையையும் அழகாக்குவதே வெண்மையான பற்கள் தான்.
பற்களின் இத்தகைய வெண்மை நிறத்தை தக்கவைத்து, மஞ்சள் கறையை போக்க, இயற்கையான முறையில் அற்புதமான டூத் பேஸ்டை நீங்களே வீட்டில் தயாரிக்கலாம் இதோ!
தேவையான பொருட்கள்
  • தேங்காய் எண்ணெய்
  • புதினா கீரை எண்ணெய்
  • மஞ்சள் தூள்
செய்முறை
முதலில் ஒரு கிண்ணத்தில் மஞ்சள் தூளை 2 மாத்திரையின் அளவு எடுத்துக் கொண்டு அதில் 1 டீஸ்பூன் தேங்காய் எண்ணெய் மற்றும் சில துளிகள் புதினா கீரை எண்ணெய் ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து கலந்து டூத் பேஸ்ட் பதத்தில் தயார் செய்து கொள்ள வேண்டும்.
பயன்படுத்தும் முறை
இந்த டூத் பேஸ்ட்டை கொண்டு தினமும் காலையில் பற்களை துலக்கி வந்தால், பற்களின் மஞ்சள் கறைகள் மற்றும் கிருமிகள் நீங்கி, பற்கள் வெண்மையாக பளிச்சிட உதவுகிறது.
நன்மைகள்
இந்த டூத் பேஸ்ட்டில் பற்களை வலிமையாக்கும் விட்டமின்கள் மற்றும் தாதுக்கள் அதிகமாக நிறைந்துள்ளதால், இது எனாமலின் ஆரோக்கியத்தை மேம்படுத்தி, சொத்த பற்கள், பல்வலி போன்ற பிரச்சனைகள் வராமல் தடுக்கிறது.http://news.lankasri.com/beauty/03/125543?ref=right_related

No comments:

Post a Comment