தொலைக்காட்சி!!

Search This Blog

Thursday, May 4, 2017

அமெரிக்க கிறீன் கார்ட்டிற்கு விண்ணப்பித்திருக்கும் இலங்கையர்களுக்கு ஓர் முக்கியச் செய்தி

U
.S 2018ஆம் ஆண்டுக்கான பன்முகத்தன்மை விசா அல்லது கிறீன்கார்ட்டிற்கு விண்ணப்பித்தவர்கள் தமது விண்ணப்பங்களின் நிலைமையை தற்போது இணையதளத்தின் மூலம் சரிபார்த்துக்கொள்ள முடியும்.
http://www.dvlottery.state.gov என்ற இணையத்தளத்தின் மூலம் தமது விபரங்களை அறிந்துகொள்ள முடியும் என கொழும்பிலுள்ள ஐக்கிய அமெரிக்கத் தூதரகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
விண்ணப்பதாரிகள் இந்த உறுதிப்படுத்தல் ரசீதுகளை 2018ஆம் ஆண்டு செப்டம்பர் 30 வரை தம்வசம் வைத்துக்கொள்ள வேண்டும்.
பன்முகத்தன்மை (கிறீன் கார்ட்) வேலைத்திட்ட விண்ணப்பதாரிகளுக்கு மோசடியான மின்னஞ்சல்கள் மற்றும் கடிதங்கள் அனுப்பப்படுவது அதிகரித்துள்ளதாக இராஜாங்க திணைக்களம் பொதுமக்களுக்கு அறிவித்துள்ளது.
DV விண்ணப்பதாரிகளிடமிருந்து அமெரிக்க அரசாங்கம் பணம் பறிப்பதற்கு முயற்சிப்பது போன்ற தோற்றப்பாட்டினை உருவாக்குவதற்கு இந்த மோசடியான மின்னஞ்சல் மற்றும் கடிதங்கள் அனுப்பப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
பன்முகத்தன்மை (கிறீன் கார்ட்) விசா விண்ணப்பதாரிகள் அவர்களது விண்ணப்பத்தின் முடிவினை இணையத்தின் மூலம் மாத்திரமே சரிபார்த்துக்கொள்ள வேண்டும்.
அமெரிக்க அரசாங்கத்திடமிருந்து அவர்களுக்கு எவ்விதமான அறிவித்தல் கடிதம், மின்னஞ்சல் அல்லது தொலைபேசி அழைப்பும் வராது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், விண்ணப்பதாரிகள் http://www.dvlottery.state.gov, இல் DV விண்ணப்ப நிலையை சரிபார்த்தல் ஊடாக இந்த நிகழ்ச்சியில் தெரிவு செய்யப்பட்டுள்ளார்களா என்பதனையும் அறிந்து கொள்ள முடியும்.
காசோலை, பணக்கட்டளை அல்லது இணையவழி பணப் பரிமாற்றம் மூலமாக முற்பண கொடுப்பனவுகளை அமெரிக்க அரசாங்கம் ஒருபோதும் கோருவதில்லை.
2017, ஒக்டோபர் 01 முதல் பன்முகவிசா (கிறீன் கார்ட்) நிகழ்ச்சியில் தெரிவு செய்யப்பட்ட விண்ணப்பதாரிகள் தமது நேர்முகத் தேர்வின்போது அமெரிக்கத் தூதரகத்தில் 330 அமெரிக்க டொலர்களை கட்டணமாக செலுத்துமாறு கோரப்படுவர்.
பன்முகவிசா (கிறீன் கார்ட்) வேலைத்திட்டம் தொடர்பான மேலதிக விபரங்களுக்கு இராஜாங்க திணைக்கள இணையத்தள முகவரி www.travel.state.gov அல்லது கொழும்பு அமெரிக்கத் தூதரக இணையத்தள முகவரி http://lk.usembassy.gov ஐ பார்க்கவும் என ஐக்கிய அமெரிக்கத் தூதரகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

http://www.tamilwin.com/statements/01/144651?ref=lankasri-home-dekstop

No comments:

Post a Comment