தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, 7 மே, 2017

ஏழரைச்சனியில் செய்ய வேண்டியவை, செய்யக் கூடாதவை!

ஏழரைச்சனியில் செய்ய வேண்டியவை, செய்யக் கூடாதவை!
ஏழரைச்சனியில் செய்ய வேண்டியவை, செய்யக் கூடாதவை!
‘சனீஸ்வரனைப் போல் கொடுப்பவரும் இல்லை கெடுப்பவரும் இல்லை” என்பதும் ஜோதிடப் பழமொழி. ஒருவரின் சந்திர ராசிக்கு, முன் ராசியிலும், சந்திர ராசியிலும், அதற்கு அடுத்த ராசியிலும் சனீஸவரன் சஞ்சாரம் செய்யும் காலமே ஏழரைச் சனியாகும்!
✧ அந்த மூன்று வீடுகளில் தலா இரண்டரை வருடங்கள் வீதம் மொத்தம் ஏழரை ஆண்டுகள் அவர் வந்து (அழைக்காத) விருந்தாளியாகத் தங்கிவிட்டுப் போகும் கால கட்டமே ஏழரைச் சனியாகும்.
ஏழரைச்சனியில் நன்மை தருவன :
♥✧ வாடகை வீட்டுக்கு குடிமாறாலாம்.
♥✧ வெளியு ர் வேலைக்கு செல்லலாம்.
♥✧ பழைய கடன்களை அடைக்கலாம்.
♥✧ மகப்பேறு செய்து கொள்ளலாம்.
♥✧ இடமாற்றங்கள் போன்றவைகளைச் செய்யலாம்.
♥✧ உயில்கள் எழுதி வைக்கலாம்.
♥✧ தான தர்ம செட்டில்மென்ட் செய்யலாம்.
♥✧ பழைய கோவில்களை திருத்திக் கட்டலாம்.
♥✧ குலதெய்வ வழிபாடுகள் செய்யலாம்.
♥✧ சீமந்தம் வளைகாப்பு செய்யலாம்.
♥✧ சுபவிரயங்களுக்காக செலவிடலாம்.
♥✧ பழைய கட்டிடங்கள் வேலை செய்யலாம்.
♥✧ பழைய பொருட்களை விற்கலாம்.
♥✧ புனித யாத்திரைகள் நன்கு செய்யலாம்.
♥✧ நல்ல விரதங்களை கடைப்பிடிக்கலாம்.
♥✧ தியானம் யோகா பயிற்சி செய்யலாம்.
♥✧ அன்னம் வஸ்திரம் தானங்கள் செய்யலாம்.
♥✧ வேறு வேலைக்கு செல்லலாம்.
♥✧ அலுவலக இடமாற்றம் நல்லதாகும்.
♥✧ குருகுலத்தில் இணைந்து பணியாற்றலாம்.
✧ எளிமையான வாழ்க்கையை நடத்தலாம்.
✧ பலன் கருதாது பணிவுடன் பணியாற்றலாம்.
ஏழரைச்சனியில்_கூடாதவை :
✧ புதிய முதலீடுகள் செய்யக்கூடாது.
✧ புதிய நட்புறவுகள் ஏற்படக்கூடாது.
✧ புதிய மனைபுகுதல் போன்றவை கூடாது.
✧ திருமணங்கள் செய்யக்கூடாது.
✧ தொழில் நிறுவனங்கள் ஆரம்பிக்க கூடாது.
✧ தொழிலில் கூட்டு சேர்க்க கூடாது.
✧ அஸ்திவாரங்கள் போடக்கூடாது.
✧ பெயர் மாற்றங்கள் செய்யக்கூடாது.
✧ கல்வியில் மாற்றங்கள் செய்யக்கூடாது.
✧ உடைகளில் மாற்றங்கள் செய்யக்கூடாது.
✧ தினசரி வேலைகளில் மாற்றங்கள் கூடாது.
✧ பத்திரங்கள் பதிவு செய்யக்கூடாது.
✧ பத்திரங்களில் கையெழுத்திடக் கூடாது.
✧ புதிய நவீன மருந்துகள் உண்ணக்கூடாது.
✧ புதிய சம்பந்தங்கள் செய்யக்கூடாது.
✧ புதிய ஒப்பந்தங்கள் செய்யக்கூடாது.
✧ கடன்கள் தருவதும், பெறுவதும் கூடாது.
✧ மது போன்ற பழக்கங்கள் பழகிடக்கூடாது.
✧ இரவில் அதிகமாய் விழித்திருக்க கூடாது.
✧ மனதை திட்டங்களுக்காக அலைக்கழிக்க கூடாது.
✧ புதியதாக அரசியலில் ஈடுப்படக்கூடாது.
✧ வாகனங்களை வேகமாக ஓட்டக்கூடாது.
✧ எந்த ஒரு செயலை அவசரமாக பதற்றமாய் செய்யக்கூடாது.
- See more at: http://www.asrilanka.com/2017/05/06/44547#sthash.tmeJeoEw.dpuf

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக