தொலைக்காட்சி!!

Search This Blog

Wednesday, May 17, 2017

உங்கள் வீட்டில் பணமழை கொட்ட வேண்டுமா? இதோ சில ரகசியங்கள்

தங்கள் வீட்டில் பணம் கொழிக்க வேண்டும் என்ற ஆசை யாருக்குத்தான் இருக்காது.
என்னதான் பணத்தினை சேமித்து வைத்தாலும், உப்பு போல அது கரைந்துவிடுகிறது என புலம்புவர்களுக்காக இதோ சில வழிகள்.
உங்களது வீட்டில் அல்லது பணிபுரியும் இடத்தில் அல்லது உங்களது தொழிற்சாலையில் ஒரு சிறு சந்தன மரப்பெட்டியை வாங்கி வைக்க வேண்டும்.
அந்தப் பெட்டிக்குள் வில்வம்,துளசி,வன்னி,ஆல இலை,வெற்றிலை, மஞ்சள், குங்குமம், மல்லிகை, தாமரை போன்றவற்றைப் பூஜித்து வைக்க வேண்டும்.
இதில் பணத்தை வைத்தெடுக்கும் பழக்கத்தை நாம் கொண்டு வரவேண்டும்.
வெள்ளிக்கிழமைகளில் வாரம் அல்லது மாதம் ஒரு வெள்ளிக்கிழமை முழுக்கவும் நாம் சம்பாதிக்கும் பணத்தை அப்படியே வைத்திருக்கவேண்டும். மறுநாள்,அந்தப்பணத்தை மற்ற காரியங்களுக்குப் பயன்படுத்திட வேண்டும்.
இப்படி அடிக்கடி செய்தால், நமது பணம் நியாயமாகவும், நல்ல விதமாகவும் நம்மை வந்தடையும், நம்மிடம் சேரும். பயனுள்ள வகையில் மட்டுமே செலவழியும்.
நடுத்தர மற்றும் பாமரக்குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் சந்தன மரப்பெட்டிக்குப் பதிலாக கருப்புப் புள்ளி இல்லாத புது மண்பானை, சுரைக்குடுவை,தேக்கு மரப்பெட்டி இவற்றில் எதாவது ஒன்றை வாங்கி மேற்கூறியவாறு பயன்படுத்தலாம்.
இதன்மூலம்,நமது பணம், மது,காமம்,புகை,ஆடம்பரம், கேளிக்கை போன்ற வீண் விரையமாகாமல் தற்காத்துக்கொள்ளலாம்.
சனிக்கிழமையன்று நவதானிய அடைதோசை நல்லெண்ணெய் விட்டுச்சாப்பிட்டால் நவக்கிரகங்கள் திருப்தியடையும். இதனால், அஷ்டமச்சனி, கண்டகச்சனி, ஏழரைச்சனி முதலியவற்றின் தாக்கம் குறையும்.
தினமும் ஏதாவது மந்திர ஜபம் செய்துவிட்டு நமது தினசரிக் கடமைகளைத் துவக்க வேண்டும். அப்படி மந்திர ஜபம் முடிந்த வுடனே ஒரு டம்ளர் இளநீர் அருந்தினால் நாம் ஜபித்த மந்திர அலைகள் நம் உடலுக்கு உள்ளேயே பதிவாகிவிடும்.
கார்த்திகை , மகம், உத்திரம், சித்திரை, மூலம், ரேவதி நட்சத்திரங்களில் எவருக்கும் எதையும் கொடுக்கவும் வாங்கவும் கூடாது.அப்படிச்செய்தால் வறுமை உங்களை வந்தடையும் என்பது ஐதீகம்.
அரச மரத்தை சனிக்கிழமை காலை 8 மணிக்குள் 108 முறை வலம் வந்து பின்பு தூப,தீபம்-நிவேதனம் செய்து வலைப்பட்டால் பண புழக்கம் அதிகரிக்கும். தொடர்ந்து ஒவ்வொரு வாரமும் செய்து வரலாம்.
செவ்வாயின் பாகமான தெற்கில் 7 நல்லெண்ணை விளக்கு (மண்) வைத்து தூபம் காட்டி வேண்டி வர, வருடக்கணக்கில் வராத கடன்களும் வந்து சேரும். ஏமாற்றப்பட்ட பொருட்களும் திரும்ப சேரும்.வீட்டிலேயே செய்யலாம்.
7 பற்கள் மட்டுமே உள்ள வெள்ளை பூண்டு வாங்கி வந்து அதுதான் 7 காய்ந்த மிளகாகளையும் சேர்த்து ஒரு நூலில் கட்டி வீடு, கடை, அலுவலக வாசல்களில் தொங்க விட திருஷ்டிகள் சகலமும் விலகி நன்மை சேரும்.
வீட்டை விட்டு வெளியே கிளம்பும் பொழுது அருகம் புல் நுனி ஒன்று பறித்து எடுத்து பாக்கெட்டில் வைத்து செல்ல செல்லும் காரியம் வெற்றி அடையும்.
http://news.lankasri.com/home-garden/03/125335?ref=lankasritop

No comments:

Post a Comment