தொலைக்காட்சி!!

Search This Blog

Thursday, May 25, 2017

ஒரு மாதத்தில் அற்புத மாற்றம்: மாம்பழத்தை முடியில் தேயுங்கள்

மாம்பழத்தை மசித்தோ அல்லது மாம்பழத்தை கற்றாழை போன்ற வேறுசில இயற்கை பொருட்களுடன் சேர்த்து கலந்தோ அதை ஸ்கால்ப் மற்றும் முடியில் தேய்த்து வர வேண்டும்.
இவ்வாறு செய்து வந்தால் ஒரு மாதத்தில் முடியின் வளர்ச்சியில் அற்புதமான மாற்றத்தை காணலாம்.
மாம்பழத்தை முடியில் தேய்ப்பதால் கிடைக்கும் நன்மைகள்
  • மாம்பழத்தில் உள்ள ஆன்டி-ஆன்ஸ்டன்டுகள் முடி மற்றும் அதன் ஸ்கால்ப்பிற்கு அதிக ஊட்டமளித்து, முடிக்கு சிறந்த பொலிவு மற்றும் வலிமையை கொடுக்கிறது.
  • மாம்பழ ஹேர் மாஸ்க்கை வாரம் ஒருமுறை செய்தால், அது கூந்தலை வலுவாக்கி முடி உதிர்வு, இளநரை போன்ற பிரச்சனைகள் ஏற்படாமல் தடுக்கிறது.
  • மாம்பழக் கூழை மற்ற சில இயற்கை பொருட்களை சேர்த்து கலந்து, அதை ஸ்கால்ப்பில் தடவி, சிறிது நேரம் கழித்து கழுவி வந்தால், பொடுகு தொல்லைகள் தடுக்கப்படும்.
  • மாம்பழத்தில் உள்ள விட்டமின்கள், வெடித்த முடிகளை சரிசெய்ய உதவுகிறது. எனவே மாதத்திற்கு ஒரு முறை மாம்பழத்தை கூந்தலுக்குப் தேய்த்து வந்தால், அது முடியின் வேர்க்கால்களை வலிமையாக்க உதவுகிறது.
  • சுருட்டை முடி உள்ளவர்கள், மாம்பழத்தை மசித்து முடிக்கு தேய்த்து வந்தால். முடி நன்கு அடங்கி அதிக சிக்கு ஏற்படாமல் தடுப்பதுடன், சிக்கலினால் ஏற்படும் முடி உதிர்வையும் தடுக்கலாம்.
  • மாம்பழக் கூழை தலையில் தேய்த்து வருவதால், முடி உடைவதை தடுக்கலாம். ஏனெனில் அதற்கு மாம்பழத்தில் உள்ள விட்டமின்கள் தான் காரணம்.
http://news.lankasri.com/beauty/03/125486?ref=right_related

No comments:

Post a Comment