தொலைக்காட்சி!!

Search This Blog

Monday, May 8, 2017

மஞ்சள் கயிற்றில் தாலி அணியும் பழக்கம் ஏன் வழக்கமானது?

மஞ்சள் கயிற்றில் தாலி அணியும் பழக்கம் ஏன் வழக்கமானது?
மஞ்சள் தாலிக்கயிறு அணிந்து குளிக்கும்போது தினமும் தாலியில் மஞ்சளைப் பூசுகின்றனர். மஞ்சள் என்பது ஒரு மிகச்சிறந்த கிருமி நாசினி. முன்பெல்லாம் மணமான பெண் அடுத்த மூன்று மாதங்களில் ஒரு கருவை சுமக்க தயாராகிறாள். அப்போது அப்பெண் பல்வேறு நோய் தொற்றுகளுக்கு உள்ளாகும் அபாயம் உள்ளது. கிருமி நாசினியான மஞ்சள் தாயையும் அவள் வயிற்றில் வளரும் சேயையும் நோய் தொற்றிலிருந்து பாதுகாக்கிறது.
பத்து இருபது ஆண்டுகளுக்கு முன்பு வரை கூட மஞ்சள் கயிறு தாலியில் கோர்த்து போட்டிருந்தனர். அப்போதெல்லாம் நம் தமிழகத்தில் எவ்வளவு சுகபிரசவங்கள் நடந்தது என்றும், தங்க செயினில் தாலி அணியும் இப்போது எவ்வளவு சுகபிரசவங்கள் நடை பெறுகிறது என்பதையும் கணக்கிட்டுப் பார்த்தால் இந்த உண்மை நமக்குப் புரியும்.
அதுபோல் 10 ஆண்டுகளுக்கு முன்பு வரை எத்தனை பெண்களுக்கு மார்பகப் புற்று நோய் இருந்தது, இப்போது எத்தனை பெண்களுக்கு இருக்கிறது என்றும் கணக்கிட்டுப் பார்த்தால் நமக்கு நன்கு புரியும்.
இப்போதும் கூட கிராமங்களில் கர்ப்பம் தரித்த பெண்கள் வெளியூர்களுக்கு செல்லும் போது தலையில் வேப்பிலை இலையை செருகி வைப்பார்கள் அது எதற்காக? வேப்பிலை ஒரு சிறந்த கிருமிநாசினி. கர்ப்பிணிகள் தலையில் இருக்கும் வேப்பிலையானது அவர்கள் செல்லும் வழியில் சுவாசிக்கும் காற்றில் இருக்கும் கிருமி தொற்றிலிருந்து காக்கிறது.
நம் முன்னோர் ஒன்றும் முட்டாள்கள் இல்லை என்பதை புரிந்து செயல்படுவோம்.
- See more at: http://www.asrilanka.com/2017/05/08/44616#sthash.JEmFldUr.dpuf

No comments:

Post a Comment