தொலைக்காட்சி!!

Search This Blog

Monday, May 8, 2017

நீரில் எலுமிச்சை சாற்றை அதிகம் கலந்து குடிக்காதீங்க: ஆபத்து

எலுமிச்சை பழத்தில் உடலுக்கு தேவையான விட்டமின் C, பொட்டாசியம் மற்றும் நார்ச்சத்து போன்றவை அதிகமாக உள்ளது.
ஆனால் எலுமிச்சை சாற்றை நீரில் அளவுக்கு அதிகமாக கலந்து குடித்தால், பல்வேறு பக்க விளைவுகளை சந்திக்க நேரிடும் என்பது உங்களுக்கு தெரியுமா?
எலுமிச்சை சாற்றை நீரில் கலந்து குடிப்பதால் ஏற்படும் பக்கவிளைவுகள்
  • எலுமிச்சை பழத்தில் உள்ள அதிகப்படியான அமிலம் பற்களில் உள்ள எனாமலை அரித்து, பற்களின் ஆரோக்கியத்தை குறைக்கிறது. எனவே நீரில் எலுமிச்சை சாற்றை அதிகமாக கலந்துக் குடிக்கக் கூடாது.
  • நீரில் அளவுக்கு அதிகமாக எலுமிச்சை சாற்றினை கலந்து குடித்தால், நெஞ்செரிச்சல், நெஞ்சு வலி பிரச்சனைகள் ஏற்படும். எனவே அமிலம் நிறைந்த உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்வதை தவிர்ப்பது நல்லது.
  • எலுமிச்சையில் விட்டமின் C மற்றும் அஸ்கார்பிக் ஆசிட் ஏராளமாக உள்ளதால், இது சிறுநீரகத்தில் சிறுநீர் உற்பத்தியை அதிகரிக்கச் செய்து, அடிக்கடி சிறுநீர் கழிக்கும் பிரச்சனையை ஏற்படுத்துகிறது.
  • லெமன் ஜூஸ் செய்யும் போது அதிக அளவில் எலுமிச்சை சாறு சேர்க்கப்படுகிறது. எனவே இந்த லெமன் ஜூஸை அதிகமாக குடித்தால், அது உடல் வறட்சியை ஏற்படுத்துகிறது.
குறிப்பு
எலுமிச்சை சாற்றினால் ஏற்படும் பக்கவிளைவுகளை தடுக்க, ஒரு டம்ளர் தண்ணீரில் பாதி பழத்தின் எலுமிச்சை சாற்றினை மட்டும் கலந்து குடிக்கலாம்.
http://news.lankasri.com/health/03/124802?ref=right_featured

No comments:

Post a Comment