தொலைக்காட்சி!!

Search This Blog

Sunday, May 21, 2017

நீரிழிவு நோயாளிகளா நீங்கள்! ‘இன்சுலின்’ ஊசிக்கு பதிலாக வருகிறது புதிய மருந்து!

நீரிழிவு நோயாளிகளுக்கு இன்சுலின் ஊசிக்கு பதிலாக புதிய மருந்து கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
இது முந்தைய இன்சுலின் ஊசி மருந்தை விட முற்றிலும் வித்தியாசமான சிகிச்சை அளிக்க கூடியது.
சர்வதேச அளவில் நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கை பெருகி வருகிறது. இரத்தத்தில் அதிகரிக்கும் சர்க்கரை அளவை சீரமைக்க இன்சுலின் ஊசி பயன்படுத்தப்படுகிறது.
இது நோயாளிகளுக்கு கடுமையான உடல் வலியை ஏற்படுத்தி வருகிறது. அதற்கு மாற்றாக தற்போது புதிதாக மருந்து கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
அடிலெய்டு பல்கலைக்கழக நிபுணர்கள் ஜான் புரூனிங் தலைமையில் ஆராய்ச்சி நடத்தி அதன் மூலம் இப்புதிய மருந்தை உருவாக்கி உள்ளனர்.
இது முந்தைய இன்சுலின் ஊசி மருந்தை விட முற்றிலும் வித்தியாசமான சிகிச்சை அளிக்க கூடியது.
இம்மருந்து கல்லீரலில் உள்ள குளுக்கோஸ் உற்பத்தியாவதை குறைக்கிறது.
இம்மருந்து விரைவில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- Maalai Malar

No comments:

Post a Comment