தொலைக்காட்சி!!

Search This Blog

Saturday, May 6, 2017

மலச்சிக்கலே வராது: இதை வெறும் வயிற்றில் குடியுங்கள்!

மலச்சிக்கல் போன்ற வயிற்று பிரச்சனையில் இருந்து உடனடியாக விடுபட்டு, வயிற்றில் உள்ள அசுத்தங்களை வெளியேற்ற இயற்கையில் உள்ள ஒரு அற்புதமான வழி இதோ!
வயிற்றுப் பிரச்சனைகளை தடுக்க என்ன செய்ய வேண்டும்?
  • ஒரு டம்ளரில் 1 டீஸ்பூன் விளக்கெண்ணெய் மற்றும் 1/2 டம்ளர் பால் ஆகிய இரண்டையும் நன்கு கலந்து குடிக்க வேண்டும். இதேபோல் வாரம் ஒருமுறை வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்.
  • 1/4 டம்ளர் ஆரஞ்சு ஜூஸ் மற்றும் 1 டீஸ்பூன் விளக்கெண்ணெய் ஆகிய இரண்டையும் ஒன்றாக கலந்து, காலையில் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். மேலும் ஒவ்வொரு 20 நிமிடத்திற்கும் 1/2 டம்ளர் சுடுநீரை 3 முறை குடிக்க வேண்டும்.
  • வயிற்றில் விளக்கெண்ணெயை நன்கு தடவி, பின் ஒரு காட்டன் துணியை வயிற்றின் மீது விரித்து, சுடுநீர் நிரப்பிய பாட்டிலால் வயிற்றுப் பகுதியை 45 நிமிடம் வரை மசாஜ் செய்ய வேண்டும்.
  • 1 டீஸ்பூன் விளக்கெண்ணெயை ஒரு கப் சுடுநீரில் ஊற்றி, நன்கு கலந்து, காலையில் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்.
  • ஒரு பாத்திரத்தில் 1 டம்ளர் நீரை ஊற்றி, நன்கு கொதிக்க வைத்து, அதில் சிறிது இஞ்சியைத் தட்டிப் போட்டு 10 நிமிடம் கழித்து வடிகட்டி, அதில் 1 டீஸ்பூன் விளக்கெண்ணெய் சேர்த்து கலந்து, காலையில் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்.
நன்மைகள்
  • உடல் ஆரோக்கியத்திற்கு உதவும் விளக்கெண்ணெயை மேல் கூறப்பட்டுள்ளதை போல் சாப்பிட்டு வந்தால், வயிற்றுப் பிரச்சனைகள் நீங்கி, வயிறு மற்றும் ஒட்டு மொத்த உடலும் சுத்தமாகும்.
  • விளக்கெண்ணெய் இயற்கை மலமிளக்கியாக செயல்படுவதால், வயிற்றில் டாக்ஸின்களின் தேக்கத்தைக் குறைத்து, மலச்சிக்கல் மற்றும் அடிவயிற்று வலி போன்ற வயிற்று பிரச்சனைகள் வராமல் தடுக்கிறது.

No comments:

Post a Comment